வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட உள்ள மாருதி சுசுகியின் ஃப்யூச்சுரோ-இ (Futuro-e) கான்செப்ட் கூபே ரக எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் முதல் டீசரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கான்செப்டின் மூலம் கார் தயாரிப்பாளர் எக்ஸ்போவில் வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று, ஃபியூச்சுரோ-இ காரினை உற்பத்தி நிலைக்கு கொண்டு வரவுள்ளது.
இதற்கு முன்பாக மாருதி சுசுகி நிறுவனத்தால் விற்பனை செய்யப்படாத பிரிவில் விற்பனைக்கு வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ஃப்யூச்சரோ இ காரில் எலக்ட்ரிக் வெர்ஷனாக எதிர்பார்ப்பதுடன் அனேகமாக 4 மீட்டருக்கு கூடுதலான நீளத்தை பெற்றிருக்கும்.
விற்பனையில் கிடைக்கின்ற மாடலைகளை விட முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மொழியை இந்த கான்செப்ட் மூலம் மாருதி சுசுகி இந்தியா கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச அளவில் மாறி வருகின்ற சந்தையின் ஓட்டத்திற்கு ஏற்பவும் வரும் கால இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான வசதிகளுடன், பல்வேறு நவீனத்துவத்தை பெற்ற காராக இது விளங்கும் என மாருதி குறிப்பிட்டுள்ளது.
மாருதி சுசுகி தற்போது இந்திய சந்தைக்கான பட்ஜெட் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தற்போதைய தலைமுறை வேகன் ஆர் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாருதி சுசுகி ஃபியூச்சுரோ-இ காரின் உற்பத்தி நிலை மாடல் மின்சார வேகன் ஆருக்கு மேலே நிலை நிறுத்தப்படலாம்.