Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2020 ஆம் ஆண்டின் உலக கார் இறுதிப் போட்டியாளர்கள் – WCOTY 2020

by automobiletamilan
February 6, 2020
in Auto Expo 2023, கார் செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த உலக கார் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள 86 முன்னணி பத்திரிக்கையாளர்களால் உலகின் சிறந்த கார் உட்பட 6 விதமான பிரிவுகளில் சிறந்த கார்களை தேர்வு செய்ய உள்ளனர்.

2020 உலகின் கார் விருதுகள்

சர்வதேச அளவில் 86 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ள சிறந்த கார் தேர்வு முறையில் பங்கேற்ற பல்வேறு கார்களில் முதல் இடங்களை பிடித்த மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 6 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலக சிறந்த கார் மட்டுமல்லாமல் உலக சொகுசு கார், உலக  பெர்ஃபாமென்ஸ் கார் , உலக சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.

2020 உலக கார் விருதுகளுக்கான இறுதிப் போட்டிகளில் ஹூண்டாய் சொனாட்டா, கியா சோல் இ.வி, கியா டெல்லுரைடு, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக், மஸ்தா 3, மஸ்தா சிஎக்ஸ் -30, மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.பி, வோக்ஸ்வாகன் கோல்ஃப் , மற்றும் ஃபோக்ஸ்வாகன் டி-கிராஸ்

கியா சோல் இ.வி, மினி எலெக்ட்ரிக், பியூஜியோட் 208, ரெனால்ட் கிளியோ மற்றும் ஃபோக்ஸ்வாகன் டி கிராஸ் ஆகிய 5 பட்டியலிலிருந்து 2020 உலக நகர கார் விருது (Urban car) பட்டியிலில் உள்ளது.

2020 ஆம் ஆண்டின் உலகின் சொகுசு கார் பிரிவில் பட்டியலிடப்பட்ட 5 கார்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, பிஎம்டபிள்யூ எக்ஸ் 7, மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி, போர்ஷே 911 மற்றும் போர்ஷே டேகென் ஆகியவை அடங்கும்.

2020 உலக பெர்ஃபாமென்ஸ் காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஐந்து இடங்களில் பிஎம்டபிள்யூ எம் 8, போர்ஷே 718 ஸ்பைடர் / கேமன் ஜிடி 4, போர்ஷே 911, போர்ஷே டேகென் மற்றும் டொயோட்டா ஜிஆர் சுப்ரா ஆகியவை அடங்கும்.

இறுதியாக 2020 உலக சிறந்த டிசைன் அமைப்பில் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து வாகனங்களும் போட்டியிடும் உள்ளன.

இதைத் தொடர்ந்து இந்த மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இறுதி போட்டியாளர்களில் உள்ள முதல் மூன்று கார்கள் அறிவிக்கப்படும். அதனை தொடர்ந்து இந்த ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்கள் ஏப்ரல் 8 ஆம் தேதி நியூயார்க் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் அறிவிக்கப்படும்.

Tags: WCOTY
Previous Post

விலை ரூ. 35.99 லட்சம், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 அறிமுகப்படுத்தப்பட்டது

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: மேக்ஸி ஸ்டைல் ஏப்ரிலியா SXR 125, SXR 160 ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Next Post

ஆட்டோ எக்ஸ்போ 2020: மேக்ஸி ஸ்டைல் ஏப்ரிலியா SXR 125, SXR 160 ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version