ஜெனீவா மோட்டார் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் உலக கார் இறுதிச்சுற்றில் உள்ள மூன்று கார்கள் தற்போது 6 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கார் பிரிவில் மஸ்தா சி3 , மஸ்தா CX-30 மற்றும் கியா டெல்லுரைடு உள்ளது.
சர்வதேச அளவில் 86 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ள சிறந்த கார் தேர்வு முறையில் பங்கேற்ற பல்வேறு கார்களில் முதல் இடங்களை பிடித்த மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 6 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலக சிறந்த கார் மட்டுமல்லாமல் உலக சொகுசு கார், உலக பெர்ஃபாமென்ஸ் கார் , உலக சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.
2020 உலக கார் விருதுகளுக்கான இறுதிப் போட்டிகளில் கியா டெல்லுரைடு, மஸ்தா 3 மற்றும் மஸ்தா சிஎக்ஸ் -30.
கியா சோல் இ.வி, மினி எலெக்ட்ரிக், மற்றும் ஃபோக்ஸ்வாகன் டி கிராஸ் ஆகிய மாடல்கள் 2020 உலக நகர கார் விருது (Urban car) பட்டியிலில் உள்ளது.
2020 ஆம் ஆண்டின் உலகின் சொகுசு கார் பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி, போர்ஷே 911 மற்றும் போர்ஷே டேகென் ஆகியவை அடங்கும்.
2020 உலக பெர்ஃபாமென்ஸ் காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்களில் போர்ஷே நிறுவனமே உள்ளது. போர்ஷே 718 ஸ்பைடர் / கேமன் ஜிடி 4, போர்ஷே 911, போர்ஷே டேகென்.
இறுதியாக 2020 உலக சிறந்த டிசைன் அமைப்பில் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து வாகனங்களும் போட்டியிடும் உள்ளன. வெற்றிப் பெற்ற கார்கள் ஏப்ரல் 8, 2020-ல் நியூ யார்க் ஆட்டோ ஷோவில் அறிவிக்கப்பட உள்ளது.