டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் அமியோ செடான் காரினை உலகளவில் அறிமுகம் செய்யப்படுவதனை டீஸர் செய்து உறுதிப்படுத்தியுள்ளது. ஏமியோ செடான் காம்பேக்ட் கார்க்ளுக்கு போட்டியாக அமையும்.
ஆட்டோ எக்ஸ்போவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள அமியோ செடான் கார் காம்பேக்ட் ரக கார்களான டிசையர் , எக்ஸ்சென்ட் , ஃபிகோ ஆஸ்பயர் , ஸெஸ்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
அமியோ (Volkswagen Ameo) என்றால் லத்தின் மொழியான AMO – i love you என்பதில் இருந்து ஃபோக்ஸ்வேகன் அமியோ அதாவது ஐ லவ் ஃபோக்ஸ்வேகன் அமியோ என உருவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்காக இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் ஏமியோ செடான் காரில் 1.2 லிட்டர் MPI மற்றும் TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர இதன் டாப் வேரியண்டில் 7 வேக DSG கியர்பாக்சினை பெற்றிருக்கும்.
பாதுகாப்பு மற்றும் தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளாமல் சிறப்பான மாடலாக தயரிக்கப்பட்டுள்ள அமியோ செடான் கார் நிச்சியமாக கேம் சேஞ்சராக விளங்கும் என ஃபோக்ஸ்வேகன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமியோ தவிர ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி , பஸாத் GTE , புதிய பீட்டில் , ஜெட்டா , வென்ட்டோ , போலோ மற்றும் க்ராஸ் போலோ போன்ற மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. டிகுவான் எஸ்யூவி காரினை இந்திய சந்தையில் இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.