பென்னிலி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்களை EICMA 2018 ஷோவில் வெளியிட்டது.

பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் டியுப்ளர் ஸ்டீல் டிரேலிஸ் பிரேம்களுடன், சஸ்பென்சன் ஹார்டுவேர்களாக 50mm மார்சாசி USD முன்புற போர்க் மற்றும் 45 mm ப்ரீலோடட் அட்ஜஸ்டேபிள் மோனோஷாக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ப்ரேம்போ நான்கு பிஸ்டன் காலிப்பர்களுடன் முன்புறத்தில் 320mm டுவின் டிஸ்க் பிறேக்குள் பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிப்பர்களுடன் 250mm சிங்கிள் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் மொத்த எடை 227kg கொண்டதாக இருக்கும்.

பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் பேர்லல்-டூவின் இன்ஜின்களுடன் 75bhp மற்றும் 66 Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும் மேலும் இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்கள் 2019ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.