மஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் பிரிவின் டிவோலி எஸ்யூவி காரினை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. க்ரெட்டா காருக்கு போட்டியாக டிவோலி காம்பேக்ட் க்ராஸ்ஓவர் கார் விளங்கும்.
பல நவீன வசதிகளை பெற்றுள்ள டிவிலோ காரில் புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் கூடிய பகல்நேர எல்இடி விளக்குகள் , 7 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை முக்கியமானவையாகும்.
மோனோக்கூ தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள டிவோலி காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனால் உள்ளது.
e-XGi160 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 124 hp ஆற்றல் மற்றும் 154 Nm டார்க் வழங்கும் . e-XDi160 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் 113 hp ஆற்றல் மற்றும் 300 Nm டார்க் வழங்கும். இதில் முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் உள்ளது.
கடந்த வருடம் முதல் உலக அளவில் பல நாடுகளில் விற்பனையில் உள்ள சாங்யாங் டிவோலி கார் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தினை தொடங்கிவிட்ட நிலையில் தற்பொழுது 2016 டெல்லி வாகன கண்காட்சி அரங்கில் வந்துள்ளதால் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
[envira-gallery id="7115"]