டாடா மோட்டார்சின் சிறிய ரக காராக வரவுள்ள டாடா சி-க்யூப் கான்செப்ட் கார் மாடலை Future Decoded 2017 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் சார்பில் மும்பையில் நடந்து வரும் கண்காட்சியில் C-க்யூப் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

டாடா சி-க்யூப்

டாடா நிறுவனம் சமீபத்தில் உருவாக்கி உள்ள டாமோ பிராண்டில் வரவுள்ள முதல் காரினை 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்த உள்ள நிலையில் இந்த மூன்று கதவுகளை கொண்ட சிறிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது.

முகப்பில் ஹெக்ஸா மற்றும் டியாகோ கார்களை போன்ற கிரில் அமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடலில் பின்புறம் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் இது நானோ காருக்கு மாற்றானதாக அமையும் வாய்ப்புகளும் உள்ளது. இதுகுறித்தான அதிகார்வப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை..

சமீபத்தில் டாடா-மைக்ரோசாஃப்ட் கூட்டணியில் கார்களுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் வகையிலான நுட்பத்திற்கு புரிந்துணர்வு ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாமோ பிராண்டில் புதிய மாடல் மார்ச் 7ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.