தானியங்கி முறையில் இயங்கும் மூன்று சக்கரங்களை கொண்ட டொயோட்டா நிறுவனத்தின்  i-TRIL கான்செப்ட் மாடல் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் பவர்டெர்யின் கொண்டு முழுசார்ஜ் உதவியுடன் 300 கிமீ வரை பயணிக்கலாம்.

i-TRIL கான்செப்ட்

எதிர்கால நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 2+1 என மூன்று சக்கரங்களை கொண்ட மாடலாக வலம் வரவுள்ள இந்த கான்செப்ட் எலக்ட்ரிக் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றுக்கு மாற்றாக குறைந்த வேகத்தின் சிறப்பான அனுபவத்தினை வழங்கும் மாடலாக i-TRIL விளங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

1+2 என்ற இருக்கை அமைப்பில் அதாவது மூன்று இருக்கைகளை கொண்ட இந்த கான்செப்ட் மாடலில் இடம்பெற உள்ள எலக்ட்ரிக் சார்ந்த என்ஜின் வாயிலாக முழுமையான சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் சுமார் 185 மைல்கள் அதாவது கிட்டதிட்ட 300 கிமீ தொலைவு வரை பயணிக்கும் வகையில் இந்த கான்செப்ட் மாடலின் எடை சுமார் 600 கிலோ எடை மட்டுமே கொண்டதாக அமைந்திருக்கும்.

இந்த மாடல் தானியங்கி முறையில் தன்னை இயக்கி கொள்ளும் வகையிலான கான்செப்ட் என்பதனால் கிளட்ச் , பிரேக் ,ஆக்சிலேரேட்டர் மற்றும் ஸ்டீயரிங் வீல் போன்றவை இல்லாமல் இயங்கும்.நமது தேவைக்கேற்ப மேனுவல் மோடில் மாற்றிக்ககொள்ளும் பொழுது தன்னால் இவைகள் தோன்றும்.

எதிர்கால மொபிலிட்டி நகர போக்குவரத்து சாதனங்களில் மிக முக்கியமானதாக  டொயோட்டா ஐ -டிரில் கான்செப்ட் விளங்கும்

 

டொயோட்டா i-TRIL கான்செப்ட் படங்கள் இணைப்பு

இணைக்கபட்டுள்ள 16 படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

[foogallery id=”17306″]