ஹோண்டா WR-V டீஸர் வெளியீடு : பிரேசில்

1 Min Read

ஜாஸ் ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்ட ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் காரின் டீஸர் பிரேசில் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வருவதனை ஒட்டி சாவொ பவுலொ மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜாஸ் காரினை அடிப்படையாக கொண்ட டபுள்யூஆர்-வி மாடலுக்கு போட்டியாக ஃபியட் அர்பன் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஏக்டிவ் , டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், போலோ க்ராஸ் மற்றும் இகோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு அமையும். க்ராஸ்ஓவர் ரக வடிவ தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட உள்ள ஹோண்டா  டபுள்யூஆர்-வி காரில் இதில் 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.

 

பிரேசில் ஹோண்டா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் இகோஸ்போர்ட் காருக்கு நேரடியான போட்டியாளராக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல் இந்தியாவிற்கு வரும்பொழுது 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் வரவுள்ளது. இந்தியாவில் ஹோண்டா WR-V க்ராஸ்ஓவர் காரின் வருகை மார்ச் 2017 ஆகும்.

TAGGED:
Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.