EICMA 2015 மோட்டார்சைக்கிள் கன்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆர்சி390 பைக்கில் கூடுதலான மெக்கானிகல் வசதிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளனழ தோற்றம் என்ஜின் ஆற்றல் போன்றவற்றில் மாற்றம் இல்லை.
கேடிஎம் RC390 பைக்கில் புதிய தொழிநுட்ப வசதிகளான சிறப்பான கியர் மாற்றும் அனுபவத்தினை வழங்கும் சிலிப்பர் கிளட்ச் , பிக்கப் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும் ரைட் பை வயர் நுட்பம் போன்றுவற்றுடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் , அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர் , ஹேண்டில் பார் லிவர் அட்ஜெஸ்ட்டிங் , எரிபொருள் ஆவியாகுவதனை தடுக்கும் கார்பன் கேனிஸ்டர் , முன்பக்க டிஸ்க் பிரேக் விட்டம் 340மிமீ அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்போக்கில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் , யூரோ 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
42.9 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 35என்எம் டார்க் வெளிப்படுத்தும் 373.2சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
கேடிஎம் RC390 பைக் உச்சகட்ட வேகம் மணிக்கு 179கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.6 விநாடிகள் எடுத்த்க்கொள்ளும். இதன் எடை 166 கிலோ ஆகும்.
இந்தியாவில் 2016 கேடிஎம் RC390 பைக் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
2016 KTM RC 390 gets mechanical updated – EICMA 2015