விரைவில் விற்பனைக்கு செல்ல உள்ள கியாவின் புதிய தலைமுறை 2017 கியா பிகான்டோ ஹைட்ச்பேக் காரின் வரைபடங்களை கியா வெளியிட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
பிகான்டோ டிசைன்
தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் குழுமத்தின் அங்கமாக விளங்கும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக மாடலாக பிகான்டோ கார் மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்புடன் அசத்தலாக வரவுள்ளது. வெளியிட்டுள்ள படங்களின் வாயிலாக கியாவின் பாரம்பரிய டைகர்-நோஸ் (tiger-nose) கிரில் அமைப்பு ஆக்ரோஷமாகவும் , தட்டையான ஹெட்லைட் ,எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , நேர்த்தியான பம்பர் , ஸ்டைலிசான பனி விளக்கு அறையை பெற்றுள்ளது. பின் தோற்ற அமைப்பில் பெற்றுள்ள C வடிவ எல்இடி டெயில் லேம்ப் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பம்பரை கொண்டுள்ளது.
இன்டிரியர் அமைப்பில் விற்பனையில் உள்ள காரை விட முற்றிலும் மேம்பாடுகளை கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் , தாரளமான இடவசதியை பெற்றதாக விளங்கும். அடுத்த ஆண்டின் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கு 2017 கியா பிகான்டோ விற்பனைக்கு செல்ல உள்ளது.
கியா நிறுவனத்தின் இந்திய வருகை உறுதியாகிவிட்ட நிலையில் தொழிற்சாலையை அமைக்க சரியான இடத்தை கியா தேர்வு செய்ய உள்ளது. சென்னையில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.