வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் 2017 கியா ரியோ ஹேட்ச்பேக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளதால் கியா ரியோ காரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான மாடலாக விளங்கும் கியா ரியோ காரின் 4வது தலைமுறை மாடல் அக்டோபர் 1ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெற உள்ள பாரீஸ் மோட்டார் ஷோ அரங்கில் வெளிப்படுத்தப்பட உள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களின் வாயிலாக கியா ரியோ காரின் முகப்பு தோற்றம் மிக ஸ்டைலிசாக விற்பனையில் உள்ள மாடலின் சாயலிலே கூடுதலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. முகப்பில் எல்இடி ஹெட்லேம்ப் ,எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , பின்பகத்தில் எல்இடி டெயில் விளக்குகளை பெற்றிருக்கும்.
உட்புறத்தில் இரட்டை வண்ண கலவை டேஸ்போர்டு ,அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாயிலாக ஆப்பிள் கார் பிளே ,ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றின் தொடர்புகளை பெற உள்ளது.
எஞ்சின் ஆப்ஷன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை வருகின்ற மோட்டார் ஷோ அறிமுகத்திற்கு பின்னர் ஐரோப்பா நாடுகளில் விற்பனைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. மேலும் ரியோ காரின் அடிப்படையிலான செடான் காரும் மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நுழைவதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது. 2019 ஆண்டு முதல் இந்தியாவில் கியா ஆண்டுக்கு 3,00,000 கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.