முந்தைய மாடலின் அடிப்படையில் தோற்ற மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் பெற்றதாக வந்துள்ள எஸ்யூவி மாடலில் முன்பக்க ஃபென்டர், கிரில், ஹெட்லேம்ப், டெயில்லைட் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது.
டேஸ்போர்டில் கூடுதலான அம்சங்களை பெற்றதாக வந்துள்ள இதில் புதிய 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வந்துள்ளது. ஐரோப்பா சந்தையில் மூன்று மற்றும் 5 டோர் ஆப்ஷன்களில் 2 வகைகளுடன் கிடைக்கின்றது.
எஞ்சின் தேர்வுகளில் 177hp பவர் மற்றும் 450Nm டார்க் வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் , 161hp பவர் மற்றும் 245Nm டார்க் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 249 hp பவர் மற்றும் 380 Nm டார்க் வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகியவற்றை பெற்றிருக்கின்றது.
இந்திய சந்தையில் புதிய லேண்ட் க்ரூஸர் பிராடோ கார் விற்பனைக்கு வருவது பற்றி எந்த தகவலும் இல்லை.