சர்வதேச அளவில் 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம்

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் மாடல் 25 ஆண்டுகால மான்ஸ்டர் 900 மாடலின் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய மான்ஸ்டர் 821 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821

முதன்முறையாக 1992 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மான்ஸ்டர் 900 வரிசை பைக்கினை நினைவுக்கூறும் வகையில் புதிய மஞ்சள் வண்ணத்தை பெற்ற மான்ஸ்டர் 821 மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பைக் பல்வேறு தோற்ற மாற்றங்களை பெற்றிருக்கின்ற நிலையில் குறிப்பாக புதிய ஹெட்லைட் விற்பனையில் உள்ள மான்ஸ்டர் 1200 மாடலின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

யூரோ 4 மாசு விதிகளுக்கு ஏற்ற புதிய மான்ஸ்டர் 821 எஞ்சின் முந்தைய ஆற்றலை விட குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 108 bhp குதிரை திறன் மற்றும் 86Nm டார்க்கினை வழங்குகின்றது.இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட ஆற்றல் 2 bhp மற்றும் 2.4 என்எம் குறைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் பிரிவில் முன்புறத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றிருக்கின்றது. இந்த பைக்கில் முன்புறத்தில் 320mm இரட்டை டூயல் டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 245 mm ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிரேக்குகளும் பிரெம்போ உடையதாகும்.

இந்த பைக்கில் டிஜிட்டல் TFT கலர் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் பெற்றிருப்பதுடன் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் 3 லெவல் வசதியை பெற்ற ஏபிஎஸ், 8 லெவல் பெற்ற டிராக்‌ஷன்கன்ட்ரோல், மற்றும் ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான ரைடிங் மோட்களை பெற்றுள்ளது.

இத்தாலி நாட்டில் அமைந்துள்ள மிலன் நகரில் வருகின்ற நவம்பர் 7-12 வரை நடைபெற உள்ள இஐசிஎம்ஏ 2017 மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படுகின்ற மான்ஸ்டர் 821 அடுத்த ஆண்டு தொடக்க மாதங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version