ஹூண்டாய் கோனா எஸ்யூவி புதிய டீசர் வெளியீடு

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக  விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக பெயர் ஹூண்டாய் கோனா என பெயரிடப்பட்ட டீசர் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா எஸ்யூவி

ஏப்ரல் 14ந் தேதி முதல் நியூயார்கில் தொடங்க உள்ள ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடல் , அமெரிக்காவில் அமைந்துள்ள ஹவாய்  மாநிலத்தில் அமைந்துள்ள சிறிய நகரத்தின் பெயர் கோனா என்பதின் பெயரேயே பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் டொயோட்டா சி-எச்ஆர்,  ஹோண்டா HR-V  மற்றும் மஸ்தா MX-3 போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு சவாலாக அமைய உள்ள இந்த எஸ்யூவி ஹூண்டாய் டூஸான் மாடலுக்கு கீழாக க்ரெட்டா எஸ்யூவிக்கு இணையாகவோ அல்லது அதற்கு இடையிலோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 

க்ரெட்டா எஸ்யூவி மாடல் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தி வருவதனால், இந்திய சந்தையில் கோனா எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. கோனா எஸ்யூவி என்ஜின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Exit mobile version