Automobile Tamilan

டாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது.

டாடா இ-விஷன் கான்செப்ட்

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்திய H5X எஸ்யூவி மற்றும் 45X ஹேட்ச்பேக் காரை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் 20வது முறையாக ஜெனிவா மோட்டார் ஷோவில் பங்கேற்பதனை கொண்டாடும் வகையில் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான அம்சத்துடன் வரவுள்ள இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 45X ஹேட்ச்பேக் தோற்றத்தின் முகப்பு அமைப்பினை தக்கவைத்துக் கொண்டு இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் டாடா ஒமேகா ஆர்க்கிடெச்சர் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

முகப்பு தோற்ற அமைப்பில் தொடர்ந்து டாடாவின் ஸ்மைலிங் கிரில் எனப்படுகின்ற humanity line தோற்ற அமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட் கொண்டதாக நேர்த்தியான கிரில் அமைப்பை பெற்று மூன்று பாக்ஸ் வடிவத்தை கொண்ட செடான் காராக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் பின்புறத்தில் ஃபாஸ்ட்பேக் கார்களுக்கான ஸ்டைலை பெற்று விளங்குகின்றது.

பிரிமியம் சொகுசு கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை கொண்டு விளங்கும் இ-விஷன் கான்செப்ட் நடுத்தர செக்மென்டில் மிக நவீனத்துவமான டிசைனுடன் இன்டிரியர் அமைப்பில் மிக எளிமையான அமைப்புடன் மிதக்கும் வகையிலான டேஸ்போர்டினை வழங்கியுள்ளது. டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேபினில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று எல்சிடி திரையை பெற்ற கிளஸ்ட்டரை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நுட்பம் தொடர்பான விபரங்களை வெளியிடாத நிலையில் 0-100 கிமி வேகத்தை எட்டுவதற்கு 7 விநாடிகள் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 200 கிமீ என டாடா உறுதிப்படுத்தியுள்ளது.

2018 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள டாடா இ-விஷன் எலெக்ட்ரிக் செடான் கான்செப்ட் மாடல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தி நிலையை எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

 

Exit mobile version