Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் டீசர் வெளியானது

by automobiletamilan
August 30, 2023
in பைக் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

tvs apache rtr 310 bike

வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வகையிலான புகைப்படத்தை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இயக்குநர் சுதர்சன் வேணு பகிர்ந்துள்ளார்.

பிஎம்டபிள்யூ- டிவிஎஸ் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள 310cc பிரிவில் வருகின்ற அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ G 310 R என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் ஸ்டைலிங் அமைப்பில் சற்று மாறுபட்டதாக அமைந்திருக்கும்.

TVS Apache RTR 310

 

அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடலில்  313சிசி என்ஜின்  33.5 bhp பவரை 9,250 rpm மற்றும் 28 Nm டார்க் ஆனது 7,500 rpm-ல் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆர்டிஆர் 310 மாடலில் டிசைன் வடிவமைப்பு தெரிய வந்துள்ள நிலையில், மிகவும் முரட்டுத்தனமான மற்றும் கூர்மையான வடிவமைப்பாக உள்ளது, பெட்ரோல் டேங்க் அமைப்பில் நீட்டிப்புகள் மற்றும் குறைந்தபட்ச டெயில் நீளம் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கும்.

அப்பாச்சி ஆர்ஆர்310 போல இந்த பைக்கிலும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் அகலமான கிளஸ்ட்டர் அமைந்திருக்கும்.

முழுமையான விபரம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி விற்பனைக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 அறிமுகம் செய்யப்படும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

tvs apache rtr 310 fr

Tags: TVS Apache RTR 310
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan