இந்தியாவில் ஜிஎஸ்டிஎனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்கு பிறகு பைக்குகள் விலை குறைந்து வரும் நிலையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் ரூ. 350 முதல் ரூ. 4,150 வரை விலையை குறைத்துள்ளது.
டிவிஎஸ் பைக்குகள் – ஜிஎஸ்டி
ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக மோட்டார் துறையில் பல்வேறு விலை குறைப்பு மற்றும் உயர்வு தொடர்பான அறிக்கைகளை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் டிவிஎஸ் இரு சக்கர வாகன பிரிவும் இணைந்துள்ளது.
நம்ம ஊரு டிவிஎஸ் நிறுவனம் 350 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலையை குறைத்துள்ளது. 160சிசி க்கு மேற்பட்ட சந்தையில் உள்ள பிரிமியம் ரக மாடல்கள் என அறியப்படுகின்ற அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மற்றும் அப்பாச்சி 200 போன்றவற்றில் அதிகபட்சமாக ரூ. 4,150 வரை விலையை குறைத்துள்ளது.
விலை குறைப்பு என்பது மாநிலம் ,மாவட்ட வாரியாக மாறுபடும் என்பதனால் விலையில் டீலர்களை பொறுத்து மாற்றங்கள் இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்கூட்டர் விற்பனையாளராக விளங்கி வருகின்றது. குறிப்பாக ஜூபிடர் ஸ்கூட்டி ஸெஸ்ட் போன்ற மாடல்களுடன் பைக்குகளில் அப்பாச்சி வரிசை பைக்குகள் , விக்டர் ஸ்டார் சிட்டி போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஹீரோ,ஹோண்டா, யமஹா,பஜாஜ் என பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய மாடல்களின் விலையை ரூ.350 முதல் அதிகபட்சமாக பிரிமியம் ரக மாடல்களுக்கு ரூ. 4,500 வரை குறைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.