சிறப்பான ஸ்டைல் தோற்ற அம்சத்தினை பெற்றுள்ள பஜாஜ் வி15 பைக்கில் புதிய ரெட் வைன் வண்ணத்தில் டீலர்களிடம் மோட்டார்சைக்கிள் வந்துள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் பஜாஜ் வி15 பைக் விலை ரூ. 63,700 ஆகும்.
க்ஃபே ரேஸர் மற்றும் க்ரூஸர் என இரு பைக்கின் வடிவ தாத்பரியங்களை ஒன்றாக நியோ – கிளாசிக் பெயரில் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் வி15 பைக்கில் இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் ஸ்கிராப் மெட்டலை கொண்டு வி15 பைக்கில் உள்ள பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.
11.8 hp ஆற்றலை வழங்கும் 150சிசி DTS-i என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.
முதற்கட்டமாக கருப்பு வண்ணத்தில் ரெட் ஸ்ட்ரைப் கொண்ட இபோனி பிளாக் , வெள்ளை வண்ணத்தில் ரெட் ஸ்ட்ரைப் கொண்ட வெள்ளை என இரு வண்ணங்களில் வந்த நிலையில் தற்பொழுது வைன் ரெட் வண்ணத்தில் பிளாக் ஸ்ட்ரைப் பெற்று ரெட் வைன் வண்ணத்தில் வந்துள்ளது.
வண்ணத்தினை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை என்பதனால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது. V15 பைக்கின் புதிய வண்ணத்தின் பற்றி அதிகார்வப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகலாம்.
பஜாஜ் வி15 பைக் விலை ரூ. 63,700 (தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம்)
[envira-gallery id=”5741″]