சுசூகி ஸ்விஷ் 125 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலை சுசூகி மோட்டார்சைக்கிள் இந்திய பிரிவு ஸ்விஷ் 125 ஸ்கூட்டரை ரூ.51,661 விலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஸ்விஷ் ஸ்கூட்டர் புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் சில புதிய வசதிகளை பெற்றுள்ளது. தற்பொழுது நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். அவை சில்வர், கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும்.
புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளதால் இனி சர்வீஸ் ரிமைன்டர், இரட்டை டீரிப் மீட்டர் மற்றும் டிஜிட்டல் கிளாக் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பூஜ்ய பராமரிப்பு பேட்டரி, டீயூப்லஸ் டயர், மற்றும் புதிய ஸ்டீல் ஃபென்டர் சேர்க்கப்பட்டுள்ளது.
என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. முந்தைய 125சிசி என்ஜினே பயன்படுத்தியுள்ளனர்.
புதிய சுசூகி ஸ்விஷ் ஸ்கூட்டர் விலை ரூ.51,661 (ex-showroom delhi)