மீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்

இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 200 NS ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த சில நாட்களில் முறைப்படி பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்தியில் விற்பனைக்கு வந்த பல்சர் 200 ஏஎஸ் மாடலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே என்எஸ் 200 (Naked Sport) மாடல் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் 150சிசி க்கு மேற்பட்ட சந்தை மதிப்பில் தன்னை முழுமையாக நிலை நிறுத்திகொள்ள பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது.

பல்சர் என்எஸ் 200 எஞ்சின்

துருக்கியில் நடைபெற்ற டீலர்கள் சந்திப்பில் பல்சர் 160என்எஸ் மாடல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்ஸர் 200என்எஸ் பைக்கும் புதிய டியூவல் டோன் வண்ணத்தில் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர் NS200  பைக்கில் 23.1 குதிரைசக்தி (24 பிஹெச்பி துருக்கி மாடல் ) வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.

விற்பனையில் இருந்து வருகின்ற பல்சர் 200 ஏஎஸ் மற்றும் 150 ஏஎஸ் மாடல்களின் உற்பத்தியை குறைக்கவோ அல்லது மாடலை நீக்கவோ பஜாஜ்  திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிப்பதனால் வருகின்ற 2017 ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதிக்குள் மீண்டும் பஜாஜ் பல்சர் 200NS இந்தியாவிலும் வரவுள்ளது.

பஜாஜ் பல்சர் 200 NS படங்கள்

மேலும் முழுமையாக 15 பல்சர் 200 என்எஸ் படங்களையும் காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

Automobile Tamilan

 

 

Automobile news in Tamil