மீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்

0
SHARES

இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 200 NS ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த சில நாட்களில் முறைப்படி பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்தியில் விற்பனைக்கு வந்த பல்சர் 200 ஏஎஸ் மாடலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே என்எஸ் 200 (Naked Sport) மாடல் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் 150சிசி க்கு மேற்பட்ட சந்தை மதிப்பில் தன்னை முழுமையாக நிலை நிறுத்திகொள்ள பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது.

பல்சர் என்எஸ் 200 எஞ்சின்

துருக்கியில் நடைபெற்ற டீலர்கள் சந்திப்பில் பல்சர் 160என்எஸ் மாடல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்ஸர் 200என்எஸ் பைக்கும் புதிய டியூவல் டோன் வண்ணத்தில் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர் NS200  பைக்கில் 23.1 குதிரைசக்தி (24 பிஹெச்பி துருக்கி மாடல் ) வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.

விற்பனையில் இருந்து வருகின்ற பல்சர் 200 ஏஎஸ் மற்றும் 150 ஏஎஸ் மாடல்களின் உற்பத்தியை குறைக்கவோ அல்லது மாடலை நீக்கவோ பஜாஜ்  திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிப்பதனால் வருகின்ற 2017 ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதிக்குள் மீண்டும் பஜாஜ் பல்சர் 200NS இந்தியாவிலும் வரவுள்ளது.

பஜாஜ் பல்சர் 200 NS படங்கள்

மேலும் முழுமையாக 15 பல்சர் 200 என்எஸ் படங்களையும் காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

Automobile Tamilan

 

 

தொடர்ந்து படிக்க

Related Posts

triumph trident 660 special edition rear

டிரையம்ப் ட்ரைடென்ட் 660 சிறப்பு எடிசன் வெளியானது

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் Isle of Man TT வெற்றியை கொண்டாடும் வகையில் ட்ரைடென்ட் 660 பைக்கில் ‘Slippery Sam’ என்ற பெயரில் சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது....

சுசூகி V-Strom 800DE

மார்ச் 29.., சுசூகி V-Strom 800 DE இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

  இந்தியாவில் வரும் மார்ச் 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுசூகி V-Strom 800 DE அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளின் முக்கிய சிறப்புகள் மற்றும்...

ஹோண்டா ஸ்டைலோ 160 ஸ்கூட்டர்

ஹோண்டாவின் ஸ்டைலோ 160 இந்தியா வருகை.?

ஹோண்டா நவீனத்துவமான ரெட்ரோ டிசைனை கொடுத்து தயாரித்துள்ள ஸ்டைலோ 160 ஸ்கூட்டருக்கான டிசைனுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்றுள்ளதால் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ்...