ரூ.12.04 லட்சம் விலையில் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் மற்றும் 70வது ஆண்டு விழா கொண்டாட்ட வெஸ்பா VXL மாடல் ரூ.96,500 விலையிலும் விற்பனைக்கு வெளியானது. இரு சிறப்பு பதிப்பு மாடல்களும் தற்பொழுது இந்தியாவில் கிடைக்கின்றது.
பியாஜியோ குழுமத்தின் 130வது ஆண்டு தினத்தை ஒட்டியும் ,பியாஜியோ அங்கமான ஜார்ஜியோ அர்மானி ஃபேஷன் ஹவுஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு தினத்தையும் சேர்த்து கொண்டாடும் வகையில் இந்த இரு ஸ்கூட்டர் மாடல்களும் விற்பனைக்கு வந்துள்ளது.
வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன்
பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.
எம்போரியோ அர்மானி ஸ்கூட்டரில் 11.7 hp ஆற்றல் மற்றும் 10.3 Nm வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை எடுத்து செல்கின்றது. மேலும் டியூவல்சேனல் ஏபிஎஸ் மற்றும் ஏஎஸ்ஆர் டிராக்ஷன்கட்ப்பாடு (ASR – anti-slip regulator) போன்றவை இடம்பெற்றுள்ளது. முன் மற்றும் பின்பக்க டயர்களில் 220மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
சாம்பல் மற்றும் பச்சை வண்ணக் கலவையில் கிடைக்கின்ற 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டரில் உள்ள பச்சை நிறம் விளக்கொளியில் மட்டுமே கண்ணுக்கு புலப்படும். இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி பெற்று ரூ.12.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புனே) விலையில் கிடைக்கின்றது.
வெஸ்பா 70வது ஆண்டு விழா பதிப்பு
வெஸ்பா பிராண்டின் 70வது வருட கொண்டாத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள வெஸ்பா VXL ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட மாடலில் அஸுரோ 70 என்ற விசேஷ வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருக்கையில் 70வது ஆண்டு பேட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது.
வெஸ்பா VXL ஸ்கூட்டரில் 11.6hp ஆற்றல் , 11.5Nm டார்க் வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை எடுத்து செல்கின்றது. முன் மற்றும் பின்பக்க டயர்களில் 200மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
வெஸ்பா VXL 70வது ஆண்டு விழா பதிப்பு விலை ரூ.96.500 (எக்ஸ்-ஷோரூம் புனே).