இந்தியாவின் விழாகாலமான செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சலுகைகளை பியாஜியோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக ‘5X Fun Offer’-ஐ வெஸ்பா மற்றும் ஏப்பிரியா ஸ்கூட்டர்களுக்கு தற்போது அறிவித்துள்ளது.
இந்த சலுகையின் மூலம் வெஸ்பா மற்றும் ஏப்பிரியா ஸ்கூட்டர்களை வாங்கும் வாச்டிகையாளர் 10,000 ரூபாக்கும் மேற்பட்ட சலுகையை பெற முடியும். ‘5X Fun Offer’-யில், ஐந்து ஆண்டு வாரண்டி மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவைகளும் அடங்கும். 125cc வெஸ்பா மற்றும் 150cc ஏப்பிரியா மாடல்கள் இந்த சலுகையை பெற முடியும்
இது சலுகை குறித்து பேசிய உயரதிகாரி ஆஷிஷ் யக்மி, ‘5X Fun Offer’ மூலம் வாடிக்கையாளர்கள் பொருளாதார ரீதியிலான பயன்களை பெற முடியும். இந்த சலுகை பெறவதற்கு வேறு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்றார்.
இந்த விழாகால சீசனில் வெஸ்பாவின் SXL125, SXL150, VXL 125, VXL150 மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட்டடி போன்றவைகள் 68,845 ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை புனேவில் ) கிடைக்கும். இதுமட்டுமின்றி ஏப்பிரியா ஸ்கூட்டர் வகைகளில் SR 125, SR 150 மற்றும் SR 150 ரேஸ் போன்றவைகளும் விறபனை வர உள்ளது.