பியாஜியோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா நிறுவனம், புதிதாக மேட் ஃபினிஷ் கருப்பு நிறத்தை பெற்ற ஸ்பெஷல் எடிஷன் மாடலாக வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டரை ரூ. 70,285 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டீலர்கள் வாயிலாக ரூ.5000 கட்டணமாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
முதன்முறையாக 2018 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாடலானது, GTS Super Notte 125 என்ற மாடலின் தோற்ற உந்துதலில் வெஸ்பா நோட் 125 முழுமையான மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. இத்தாலி வார்த்தையான Notte என்பதற்கு தமிழில் இரவு என்பது பொருளாகும். கருமை நிறம் கண்ணாடி, இருக்கை, அலாய் வீல் என அனைத்திலும் பெற்று விளங்குகின்று.
இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஆப்ரிலியா எஸ்ஆர் 125, வெஸ்பா 125 ஆகிய ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் 10 bhp பவர் மற்றும் 10.6 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள வெஸ்பா 125 மாடலின் விலையை ரூ.4,000 வரை விலை குறைக்கப்பட்டதாக வந்துள்ள வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டர் விலை ரூ. 70,285 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) ஆகும். இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக டிவிஎஸ் என்டார்க் 125, கிராஸியா, பர்க்மென் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்குகின்றது.