ஹோண்டா சிபிஆர் 150ஆர் மற்றும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்குகளின் விற்பனைக்கு வந்துள்ளது. ரெவ்ஃபெஸ்ட் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வண்ணம் கொண்ட சிபிஆர் 150ஆர் , சிபிஆர் 250ஆர் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஹோண்டா சிபிஆர் 150ஆர் |
வேறு எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் புதிய வண்ணங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை மட்டுமே பெற்று விளங்குகின்றது. சர்வதேச அளவில் இரண்டுமே இரட்டை வண்ண விளக்குகளுடன் விற்பனையில் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 150ஆர்
சிபிஆர் 150ஆர் பைக்கில் 18.28பிஹெச்பி ஆற்றல் மற்றும் 12.66 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 149சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் வேகம் மணிக்கு 109கிமீ ஆகும். நீலம், சிவப்பு மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஹோண்டா சிபிஆர் 250ஆர்
சிபிஆர் 250ஆர் பைக்கில் 26.15பிஹெச்பி ஆற்றல் மற்றும் 22.9 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 249சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கின் வேகம் மணிக்கு 135கிமீ ஆகும். கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக் விலை
சிபிஆர் 150ஆர் – ரூ. 1,40,269
ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் விலை
சிபிஆர் 250ஆர் – ரூ. 1,81,488
சிபிஆர் 250ஆர் – ரூ. 2,13,716 (ABS)
{ அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை }
New Honda CBR 150R , CBR 250R Chennai On-road price details