Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம்

By MR.Durai
Last updated: 15,November 2016
Share
SHARE

ரூ.12.04 லட்சம் விலையில் வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் மற்றும் 70வது ஆண்டு விழா கொண்டாட்ட வெஸ்பா VXL மாடல் ரூ.96,500 விலையிலும் விற்பனைக்கு வெளியானது. இரு சிறப்பு பதிப்பு மாடல்களும் தற்பொழுது இந்தியாவில் கிடைக்கின்றது.

பியாஜியோ குழுமத்தின் 130வது ஆண்டு தினத்தை ஒட்டியும் ,பியாஜியோ அங்கமான ஜார்ஜியோ அர்மானி ஃபேஷன் ஹவுஸ் நிறுவனத்தின் 40வது ஆண்டு தினத்தையும் சேர்த்து கொண்டாடும் வகையில் இந்த இரு ஸ்கூட்டர் மாடல்களும் விற்பனைக்கு வந்துள்ளது.

வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன்

பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது.

எம்போரியோ அர்மானி ஸ்கூட்டரில் 11.7 hp ஆற்றல் மற்றும் 10.3 Nm வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை எடுத்து செல்கின்றது. மேலும் டியூவல்சேனல் ஏபிஎஸ் மற்றும் ஏஎஸ்ஆர் டிராக்ஷன்கட்ப்பாடு (ASR – anti-slip regulator) போன்றவை இடம்பெற்றுள்ளது. முன் மற்றும் பின்பக்க டயர்களில் 220மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

சாம்பல் மற்றும் பச்சை வண்ணக் கலவையில் கிடைக்கின்ற 946 எம்போரியோ அர்மானி ஸ்கூட்டரில் உள்ள பச்சை நிறம் விளக்கொளியில் மட்டுமே கண்ணுக்கு புலப்படும்.  இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை வெஸ்பா 946 எம்போரியோ அர்மானி பெற்று ரூ.12.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புனே) விலையில் கிடைக்கின்றது.

வெஸ்பா 70வது ஆண்டு விழா பதிப்பு

வெஸ்பா பிராண்டின் 70வது வருட கொண்டாத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள வெஸ்பா VXL ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட மாடலில் அஸுரோ 70 என்ற விசேஷ வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருக்கையில் 70வது ஆண்டு பேட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளது.

வெஸ்பா VXL ஸ்கூட்டரில் 11.6hp ஆற்றல் , 11.5Nm டார்க் வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை எடுத்து செல்கின்றது. முன் மற்றும் பின்பக்க டயர்களில் 200மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

வெஸ்பா VXL 70வது ஆண்டு விழா பதிப்பு விலை ரூ.96.500 (எக்ஸ்-ஷோரூம் புனே).

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Vespa
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
hero-xpulse-200s-4v-pro-white
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
2025 யமஹா FZ-S Fi hybrid
Yamaha
2025 யமஹா FZ-S Fi ஹைபிரிட் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
bajaj pulsar n125 bike
Bajaj
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms