முதல் வருட கொண்டாட்டத்தை ஒட்டி இரு புதிய வண்ணங்களை ஹோண்டா லிவோ பைக் பெற்றுள்ளது. இம்பெரியில் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என இரு நிறங்கள் ஹோண்டா லிவோ பைக்கில் இடம்பெற்றுள்ளது.

honda-Livo-Grey

முதல் ஒரு வருடத்தில் 2.50 லட்சம் பைக்குகள் விற்பனை ஆகியுள்ள நிலையில் 110சிசி பைக் பிரிவில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கி வருகின்றது. டிவிஸ்ட்டர் மாடலுக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட்ட லிவோ பைக் நல்லதொரு வரவேற்பினை பெற்றுள்ளது.

லிவோ 110 பைக்கில் 8.25பிஎச்பி ஆற்றலை வழங்கும் 110சிசி எச்இடி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 8.63என்எம் ஆகும். லிவோ பைக் மைலேஜ் லிட்டருக்கு 74 கிமீ ஆகும்.

லிவோவில் 130மிமீ ட்ரம் முன் மற்றும் பின்புற பிரேக் மற்றும் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்  என இரண்டு வேரியண்ட்களில் லிவோ கிடைக்கின்றது.

முதல் வருட விற்பனை குறித்து ஹெச்எம்எஸ்ஐ (HMSI) விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் Y.S குல்ரியா கூறுகையில் கடந்த 12 மாதங்களில் லிவோ சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்று 2.5 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று 100-110சிசி சந்தையில் சிறந்து விளங்குகின்றது. இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள லிவோ பைக்கில் முந்தைய வண்ணங்களுடன் கூடுதலாக இரு வண்ணங்கள் இனைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

honda-Livo-red

கருப்பு , நீலம் , பிரவுன் மற்றும் வெள்ளை என 4 விதமான முந்தையை  வண்ணங்களுடன் கிரே மற்றும் சிவப்பு வண்ணத்திலும்  கிடைக்கும்.

ஹோண்டா லிவோ பைக் விலை- ரூ. 62,950 (டிரம்) ,  ரூ.65,680 (டிஸ்க் பிரேக்) ஆன்ரோடு சென்னை