புதிய சுஸூகி ஹையபுஸா பைக்கில் புதிதாக மூன்று வண்ணங்கள் சேர்க்கப்பட்டு ரூ.13.88 லட்சம் விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. புதிய நிறங்களை தவிர வேறு எந்த மாற்றங்களும் 2017 ஹயபுஸா பைக்கில் இடம்பெறவில்லை.
குர்கானில் சுஸூகி நிறுவனத்தின் ஆலையிலே சிகேடி முறை எனப்படும் பாகங்களை தருவித்து உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுவதனால் விலை ரூ.2.5 லட்சம் வரை குறைந்துள்ள நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வண்ணங்கள் கருப்பு (glass sparkle black) , வெள்ளை/கருப்பு (glass sparkle black/pearl glacier white) மற்றும் நீளம் / கருப்பு (Pearl Vigor Blue/Glass Sparkle Black) போன்றவை ஆகும்.
மிகவும் சக்திவாய்ந்த ஹயபுஸா பைக்கில் இடம்பெற்றுள்ள 1340cc இன்லைன் எஞ்சின் வாயிலாக 194bhp பவர் மற்றும் 154Nm டார்க் வெளிப்படுத்தும். சுஸூகி ஹையபுஸா பைக்கின் உச்ச கட்ட வேகம் மணிக்கு 299 கிலோமீட்டர் ஆகும்.
உலகில் உற்பத்தியில் உள்ள மிக வேகமான சூப்பர் பைக்குகளில் மிக முக்கியமான ஒன்றாக ஹையபுஸா திகழ்கின்றது.