மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா சிபி ஷைன் மாடலில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் வசதியுடன் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ. விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
2017 ஹோண்டா சிபி ஷைன்
பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் கட்டாயமாகுவதனால் அனைத்து தயாரிப்பாளர்களுமே தங்களுடைய இரு சக்கர வாகனங்களை பிஎஸ் 4 தரத்துக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக பஜாஜ் ஆட்டோ தனது அனைத்து மாடல்களிலும் பிஎஸ் 4 எஞ்சினை பொருத்தியுள்ளது. ஹோண்டா படிப்படியாக தனது மாடல்களில் பிஎஸ்4க்கு மாற்றி வருகின்றது.
பிஎஸ் 4 விதிகளுக்கு மாறுவதனால் அனைத்து இருசக்கர வாகனங்களும் ரூ.500 முதல் 1000 வரை விலை உயர்வினை சந்தித்து வருகின்றது. புதிய சிபி ஷைன் மாடலில் பிஎஸ் 4 எஞ்சின் , ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன் வசதியுடன் , க்ரோம் கவர் பெற்ற மஃப்லர் மற்றும் கார்புரேட்டர் போன்றவைபெற்றுள்ளது.
10.16 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் உள்ள ஷைன் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் /130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்புறத்தில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் அமைப்பினை டாப் வேரியண்டில் கொண்டுள்ளது.
சிபி ஷைன் பைக்கின் பிரிமியம் மாடலாக சிபி ஷைன் எஸ்பி மாடலும் விற்பனையில் உள்ளது.
Model | Ex-Showroom | On-Road | |
---|---|---|---|
சென்னை | CB SHINE (SELF-DRUM) | ரூ. 58928 | ரூ.65792 |
CB SHINE (SELF-DISC)-CBS | ரூ.64270 | ரூ.71621 | |
CB SHINE (SELF-DISC) | ரூ.61295 | ரூ.68375 |