மேம்படுத்தப்பட்ட புதிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ரூ. 50,434 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 2017 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

 டிவிஎஸ் வீகோ

கடந்த 2009ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள வீகோ ஸ்கூட்டரில் கூடுதலாக இரண்டு புதிய வண்ணங்களுடன் , இரு வண்ண இருக்கை கவர் , சில்வர் ஓக் பேனல்ஸ் , யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

தற்பொழுது 10 வண்ணங்களில் கிடைக்கின்ற வீகோவில் புதிதாக சேர்கப்பட்டுள்ள வண்ணங்கள் மெட்டாலிக் ஆரஞ்சு மற்றும் டி கிரே ஆகிய வண்ணங்களாகும். மேலும் இந்த ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் ,கருப்பு வண்ண அலாய் வீல் , எல்இடி டெயில் விளக்குகளும் இடம்பெற்றுள்ளன.

பிஎஸ் மாசு கட்டுப்பாடு எஞ்சினுடன் வந்துள்ள வீகோ ஸ்கூட்டரில் 8 பிஹெச்பி பவருடன் , 8 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 109.74சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு ஆற்றலை எடுத்து செல்ல வி மேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

வீகோ ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் அக்டிவா மற்றும் லெட்ஸ் ஆகும். 2017 டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் விலை ரூ. . 50,434 (எக்ஸ்ஷோரூம் டெல்லி)