உலகின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், பிரபலமான ஹீரோ கரிஸ்மா ZMR பைக் மாடலை மீண்டும் இந்திய சந்தையில் ரூ. 1,08,000 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா R  மிகுந்த வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதனை தொடர்ந்து இரு முறை மேம்படுத்தப்பட்ட கரிஸ்மா மாடல் விற்பனைக்கு வந்த நிலையில் மிக கடும் சவால்களின் காரணமாக சந்தையில் போட்டியிட முடியாமல் தவித்த நிலையில் அதிரடியாக கரிஸ்மா இசட்எம்ஆர் நீக்கப்பட்டது. தற்போது மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப வசதிகள் இணைக்கப்படவில்லை என்றாலும் முந்தைய மாடலின் அடிப்படையில் மீண்டும் இசட்எம்ஆர் ஒற்றை மற்றும் இரட்டை நிற வண்ண கலவையில் வெளியாகியுள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்டர் பெற்ற 223 சிசி எஞ்சின் பொருத்தபட்டு அதிகபட்சமாக 20 ஹெச்பி பவர் மற்றும் 19.7  என்எம் இழுவைத் திறனை பெற்று விளங்குகின்று. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தொடக்க நிலை ஸ்போர்ட்டிவ் சந்தைக்கான மாடலாக விளங்குகின்ற கரிஸ்மா ல ஆண்டுகளாக மேம்படுத்தப்படவில்லை என்றாலும் மிகவும் ஸ்டைலிலாக பல்சர் 200, டிவிஎஸ் அப்பாச்சி 200, கேடிஎம் டியூக் 200, யமஹா FZ25 உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடியான போட்டியாக சந்தைக்கு திரும்பியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட ஹீரோ கரிஸ்மா விற்பனைக்கு வரவுள்ள நிலையில் மீண்டும் கரிஸ்மா சந்தைக்கு வந்துள்ளது.

2018 ஹீரோ கரிஸ்மா ZMR  – ரூ. 1,08,000

2018 ஹீரோ கரிஸ்மா ZMR  – ரூ. 1,10,500 (Dual tone)

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)