கவாசாகி நிறுவனம் KLX140G லைட்வெயிட் ஆப்-ரோடு மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை, 4.96 லட்சமாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). KLX140G பைக்கள் ஆப்-ரோடு திறனுடன், லைட்வெயிட் பேக்கேஜ்-ஆக அறிமுகமாகியுள்ளது.

இது புதியவர்கள் பயிற்சி பெறுவதற்கான பைக் என்று தெரிவித்துள்ள கவாசாகி நிறுவனம், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை குறிவைத்தே இந்த மோட்டார் சைக்கிள்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சிலிம் சேஸ் மற்றும் லைட்வெயிட் பாடிகளுடன், 144cc ஏர்-கூல்டு இன்ஜின் கொண்ட இந்த பைக், உறுதியான டார்க்யூ கொண்டதாக இருக்கும். கவாசாகி KLX140G பைக்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் இந்த பைக்கின் இன்ஜின்கள் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் மெனுவல் கிளட்ச் பொருத்தப்பட்டதாக இருக்கும்.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள முழு அளவிலான வீல்கள், கிரவுண்ட் கிரியரன்ஸ் மற்றும் அதிக எடை கொண்ட மோட்டார் சைக்கிள்களை அதிக திறன் மற்றும் ஆப்-ரோடு ரைடுகளுக்கு வசதியாக இருக்கும். பழைய மாடல்களுடன் ஒப்பிடும் போது KLX140G மாடல்களில் எந்தவிதமான மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய பைக்கில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.