2019 சுசுகி ஜிக்ஸர் 150 பைக் பற்றி 5 முக்கிய சிறப்புகள்

2019 Suzuki Gixxer

சுசுகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், ஜிக்ஸர் 2019 பைக்கில் பல்வேறு சிறப்புகளை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக முந்தைய மாடலை விட ரூ.12,000 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2019 ஜிக்ஸெர் பைக்கில் கவனிக்க வேண்டிய அம்சங்களில் எஃப்ஐ என்ஜின், எல்இடி டெயில் மற்றும் ஹெட்லைட், டிஜிட்டல் கன்சோல் போன்றவற்றுடன் டூயல் டோன் பெற்ற மூன்று நிறங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்பாக வெளியிடப்பட்டுள்ள ரூ.1.70 லட்சம் விலையிலான ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மற்றும் ரூ.1.10 லட்சம் விலையில் வெளியான ஜிக்ஸர் எஸ்எஃப் ஆகிய ஃபேரிங் ரக மாடல்களை பின்பற்றி நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலாக ஜிக்ஸர் 155 விளங்குகின்றது.

புதிய டிசைனை பெற்ற ஜிக்ஸர்

முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலை விட முற்றாக பல்வேறு மேம்பாடுகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் டூயல் ஃபினிஷ் பெற்ற சில்வர் உடன் கலந்த கருப்பு, நீல நிறத்துடன் கலந்த கருப்பு மற்றும் பிளாக் என மொத்தமாக மூன்று நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் டேங்க டிசைன் புதுப்பிக்கப்பட்ட மிக நேர்த்தியான முறையில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்டீரிட் ஃபைட்டர் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது. எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டெயில்லைட் உடன் ஸ்டைலிஷான ஜிக்ஸர் ஸ்டிக்கரிங் கொண்டதாக அமைந்துள்ளது.

2019 Suzuki Gixxer

ஜிக்ஸர் பைக்கில் யூனிக் ஸ்டைலில் அமைந்துள்ள டெயில் மற்றும் மிட் செக்‌ஷன் பொதுவாக நேக்டூ மற்றும் ஃபேரிங் ரகத்தில் ஒரே மாதிரியான ஸ்டைலை கொண்டதாக அமைந்திருக்கின்றது.

மேம்பட்ட என்ஜின்

இனி கார்புரேட்டர் கிடையாது, வரும் பிஎஸ் 6 நடைமுறைக்கு முன்பாகவே பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான பெற்றிருக்கும் நிலையில் எஃப்ஐ என்ஜின் பெற்றுள்ளது. ஆனால், முந்தைய மாடலை விட பவர் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 0.7 பிஎஸ் பவர் சரிவடைந்து, தற்போது 2019 சுசுகி ஜிக்ஸர் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 14 14.1 PS மற்றும் 14 Nm டார்க் வெளிப்படுத்தும் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.

Suzuki Gixxer Tamil

டிஜிட்டல் கன்சோல்

ஜிக்சர் பைக்கில் முன்பாக வெளியிடபட்ட எஸ்எஃப் மாடல்களில் உள்ளதை போன்ற புதிய எல்சிடி டிஸ்ப்ளே டிஜிட்டல் கன்சோலை கொண்டுள்ளது. முந்தை மாடல் இருந்த கிளஸ்ட்டர் யூனிட்டை விட 13 மிமீ மெலிதாக அமைந்துள்ளது. புதிய டிஸ்ப்ளே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் மிகவும் சீரான தோற்றமுடைய இதில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் இடதுபுறத்திலும், ஷிப்ட் லைட் டிஸ்ப்ளே மேற்புறத்திலும் உள்ளது. முந்தைய மாடலை போல அல்லாமல் வெள்ளை நிறத்தினை பின்புலத்தில் கொண்டதாக அமைநிருக்கின்றது.

குறிப்பிடதக்க மாற்றங்கள்

கார்புரேட்டர் நீக்கபட்டது போல அடுத்த மிக முக்கியமாக கிக் ஸ்டார்டரை தவிர்க்கப்பட்டு எலெக்ட்ரிக் ஸ்டார்ட்ரை மட்டும் 2019 சுசுகி ஜிக்ஸர் பைக் பெற்றுள்ளது. மேலும், முன்பாக ஒற்றை இருக்கை இடம்பெற்றிருந்த நிலையில், இனி ஸ்பிளிட் சீட் பெற்றிருக்கும்.

அடுத்தப்படியாக, ஜிக்ஸர் 2019 மாடலின் அளவுகளில் மாற்றம் செய்யபட்டுள்ளது. 2020 மிமீ நீளம் பெற்றுள்ளது. இது முந்தைய மாடலை விட 30 மிமீ குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மிமீ அகலம் மற்றும் 5 மிமீ உயர்ம் குறைவாக உள்ளது.  இந்த பைக்கின் வீல்பேஸ் 5 மிமீ அதிகரிக்கப்பட்டு 1335 மிமீ ஆக உள்ளது.

இருக்கையின் உயரம் 15 மிமீ அதிகரிக்கப்பட்டு தற்போது 795 மிமீ ஆக உள்ளது.

2019 Suzuki Gixxer Black

2019 சுசுகி ஜிக்ஸர் பைக் விலை

முந்தைய மாடலை விட புதிய 2019 சுசுகி ஜிக்ஸர் பைக் விலையை ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட்டு, தமிழகத்தில் 2019 சுசுகி ஜிக்ஸர் 155 பைக் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,00,852 ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 150சிசி முதல் 180சிசி வரையிலான மாடல்களுக்கு நேரடியாகவும், சில 200சிசி பைக்குகளுக்கு சவாலாக விளங்குகின்றது.

தொடர்புடைய செய்திகள்

2019 Suzuki Gixxer Headlight

2019 Suzuki Gixxer Specs

விலை பட்டியல்
Price Range Ex-showroom – ChennaiRs 1,00,852
ENGINE
சிலிண்டர் எண்ணிக்கை1
Cubic Capacity (cc)155
என்ஜின் முறைஒற்றை சிலிண்டர்
கூலிங் முறைAir-cooled
எரிபொருள் முறைFI
குதிரைத்திறன் (hp @ rpm)14 hp at 8000rpm
டார்க் (nm @ rpm)14Nm at 6000rpm
TRANSMISSION
கியர்பாக்ஸ்5
Dimensions & Chassis
எடை (kg)140kg
நீளம் (mm)2020mm
அகலம் (mm)800mm
உயரம் (mm)1035mm
வீல் பேஸ் (mm)1335mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் (mm)160mm
இருக்கை உயரம் (mm)795mm
எரிபொருள் கலன் (lts)12 litres
BRAKES
முன்புற பிரேக்டிஸ்க்
பின்புற பிரேக்டிஸ்க்
SUSPENSION
முன்புற சஸ்பென்ஷன்டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்புற சஸ்பென்ஷன் மோனோ சஸ்பென்ஷன்
வீல்ஸ் மற்றும் டயர்
முன் சக்கரம் (inch)17
முன் டயர்100/80
பின் சக்கரம் (inch)17
பின் டயர்140/60R

2019 Suzuki Gixxer Tamil Image Gallery

Related Posts