Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019 ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
February 14, 2019
in பைக் செய்திகள்

ரூபாய் 7.45 லட்சம் விலையில் ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65hp பவரை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பெற்றதாக அமைந்துள்ளது.

முந்தைய மாடலை விட கூடுதல் பவர் மற்றும் பல்வேறு புதிய அம்சங்களை பெற்று வந்துள்ள ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் கடந்த மாடலை விட ரூ.25,000 குறைவான விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின்

18 சதவீதம் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு சிறப்பான டார்க் வழங்குகின்ற 900சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பெற்று 65 ஹெச்பி பவர் மற்றும் 80 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில்  5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. என்ஜினில் இலகு எடை கொண்ட பேலன்சர் மற்றும் கிராங்க் ஷாஃப்ட், குறைந்த எடை பெற்ற கிளட்ச் பிளேட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

சிவப்பு, கருப்பு மற்றும் ஐயன்ஸ்டோன் என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ள இந்த பைக்கில் பாரம்பரிய தோற்றத்தை வெளிப்படுத்தும் அமைப்புடன், நேர்த்தியான அம்சங்களை பெற்றுள்ளது. புதிய மாடலில் ஹெட்லைட் கவர், சைடு பேனல்களில் ஸ்டிக்கரிங் போன்றவற்றில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீட் ட்வின் பைக்கில் இரண்டு விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. அவை ரோடு மற்றும் ரெயின் ஆகும். இந்த மோட் வாயிலாக சிறப்பான செயற்பாட்டை இந்த பைக் வெளிப்படுத்த உதவுகின்றது.

இந்த மாடலில் குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடு பை ஒயர் தொழில்நுட்பம், எல்சிடி மல்டி ஃபங்ஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஹீட்டட் க்ரிப் கவர்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இந்த பைக்கின் முன்புற டயரில் நான்கு பிரெம்போ பிஸ்டன் காலிப்பரை பெற்ற 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் இரு பிஸ்டனை பெற்ற 255 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று  டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் நுட்பத்தை கொண்டுள்ளது.

ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பைக் விலை ரூபாய் 7.45 லட்சம் விற்பனையக விலையாகும். இதை தவிர ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் பைக் விலை ரூபாய் 8.55 லட்சம் ஆகும்.

Tags: TriumphTriumph Street ScramblerTriumph Street Twinட்ரையம்ஃப்ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version