ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் வரிசையில் இடம்பெற்றுள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மேம்படுத்தப்பட்ட மாடலுடன் ஹீரோ கனெக்ட் வசதி பெற்றதாக அமைந்துள்ளது.
சமீபத்தில் ஹீரோ கிளாமர் எக்ஸ்டெக் பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கனெக்ட்டிவிட்டி வசதி பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேஸ்ட்ரோ எட்ஜில் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125
125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது.
முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் எரிபொருள் இருப்பை நிகழ்நேரத்தில் அறிவதுடன், கியர் பொசிஷன், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியில் கூகுள் மேப் ஆதரவுடன் கூடிய டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலெர்ட் ஆகியவள்ளை அறிவிப்புகளாக திரையில் பெறலாம்.
ஹீரோ கனெக்ட் ஆப் மூலம் டாப்பிள் அலர்ட், பார்க்கிங் விவரம், திருட்டு எச்சரிக்கை, பயண பகுப்பாய்வு மற்றும் வாகன கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
125சிசி சந்தையில் முதன்முறையாக எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் பெற்றதாக அபைந்துள்ள மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் 190 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் என இரு ஆப்ஷன்களுடன், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.