Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2021 யமஹா எம்டி-09 பைக் அறிமுகமானது

by automobiletamilan
October 29, 2020
in பைக் செய்திகள்

பிரசத்தி பெற்ற நேக்டூ ஸ்டீரிட்ஃபைட்டர் மாடலான யமஹா எம்டி-09 பைக்கின் பவர், டார்க் உட்பட பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு செல்ல உள்ள இந்த மாடலின் விலை அறிவிக்கப்படவில்லை.

முந்தைய மாடலை விட 4 கிலோ வரை எடை குறைக்கப்பட்டு இப்போது 189 கிலோ கொண்டுள்ளது. இன்ஜின் ஆப்ஷனை பொறுத்தவரை 42சிசி வரை உயர்த்தப்பட்டு யூரோ 5 மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கபட்டு 889சிசி  3 சிலிண்டருடன் DOHC லிக்யூடு கூல்டு இஞ்சின் 118bhp பவரை 10,000rpm-ல் மற்றும் 93Nm டார்க் 7,000rpm-ல் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வழங்கும் வகையில் எரிபொருள் அமைப்பு, புகைப்போக்கி உள்ளிட்டவையுடன் பிஸ்டன், கிராங்சாஃப்ட், ராட்ஸ் மற்றும் கிராங்கேஸ் போன்றவை புதியதாக மாற்றப்பட்டுள்ளது.

2021 யமஹா எம்டி-09 பைக்கில் 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ மூன்று நிலைகளைக் கொண்ட லின் சென்செட்டிவ் டிராக்‌ஷன் கட்டுப்பாடு, ஸ்லைடு கட்டுப்பாடு, வீலி மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக் கட்டுப்பாடு மற்றும் மாற்றக்கூடிய ரைடர் மோடுகளுடன் மின்னணு ரைடர் எய்ட்ஸ் கண்காணிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட எம்டி-09 மாடலில் 3.5 அங்குல முழு வண்ண டிஎஃப்டி கன்சோலையும் கொண்டுள்ளது. இதில் கடிகாரம், கியர்ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் நீர் / காற்று வெப்பத்தின் உள்ளிட்ட பல தகவல்களைக் காட்டுகிறது.

முன்புறத்தில் KYB USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு, 298 மிமீ டூயல் டிஸ்க் பிரேக் முன்புறத்திலும், பின்புறத்தில் சிங்கிள் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் ஐரோப்பா சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ள புதிய யமஹா எம்டி-09 பைக்கின் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டின் மத்தியில் அறிவிக்கப்படலாம்.

Web Title : 2021 Yamaha MT-09 Revealed

Tags: Yamaha MT-09யமஹா எம்டி-09
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version