பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் கூடுதல் வசதிகளுடன் 4V ஸ்டிக்கர் பெற்றதாக சாலை சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் உள்ள இரண்டு வால்வு என்ஜினுக்கு பதிலாக 4 லால்வு பெற்ற என்ஜினை எக்ஸ்பல்ஸ் 200 பைக் பெறுவதனை உறுதி செய்யும் வகையில் ‘4-valve’ என்ற ஸ்டிக்கரை பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள மாடலில் 17.8bhp பவர் மற்றும் 16.45Nm டார்க்கினை வெளிப்படுத்தும் நிலையில், புதிய எக்ஸ்பல்ஸ் 200 4வி கூடுதல் பவரை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சோதனை ஓட்ட படங்களில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலுக்கு புதிய நிறங்களை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருப்பு மற்றும் நீல நிறத்தை பேனல்களை உள்ளடக்கியது.
மீதமுள்ள அம்சங்கள் பெரும்பாலும் மாறாமல் இருக்கும். எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 21 அங்குல முன்புற வீல் உடன் 18 இன்ச் வீல் உடன் பயணிக்கிறது. ஒற்றை-சேனல் ஏபிஎஸ் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கிங் கையாளப்படுகிறது. இது ப்ளூடூத் இயக்கப்பட்ட எல்சிடி கன்சோலுடன் எல்இடி விளக்குகளையும் பெறுகிறது.
தற்போது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விலை ரூ.1.21 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) உள்ளது. ரூ.5,000-8.000 வரை விலை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.