ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2023 பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. புதிதாக நீல நிறத்தை பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஹீரோ கனெக்ட் 2.0 அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
மேம்படுத்தப்பட்டுள்ள பிளெஷர் பிளஸ் எக்ஸ்டெக் மாடலில் டெலிமாடிக்ஸ் அம்சத்தை ஹீரோ கனெக்ட் 2.0 என்ற பெயரில் பெற்றுள்ளது.
2023 Hero Pleasure+ Xtech
110cc பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டரில் 110.9 cc என்ஜின் xens நுட்பத்துடன் பவர் 8 bhp @ 7250 rpm மற்றும் டார்க் 8.70 Nm @ 5750 rpm வெளிப்படுத்துவதுடன் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
டாப் CX வேரியண்டில் ஹீரோ கனெக்ட் 2.0 மூலம் டெலிமாடிக்ஸ் செயல்பாடுகள் வாகன கண்காணிப்பு, இம்மொபைல்சேஷன், வாகனம் கண்டறிதல், பேனிக் எச்சரிக்கை, அவசரகால எச்சரிக்கை, ஓவர் ஸ்பீட் அலர்ட், திருட்டு எச்சரிக்கை, ஜியோஃபென்ஸ் எச்சரிக்கை, வாகன ஆரோக்கியம் மற்றும் பலவற்றை பெற்றுள்ளது.
அடுத்தப்படியாக யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ளோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாகவும், இரு பக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக உள்ளது. புதிதாக மேட் பிளாக் மற்றும் ப்ளூ என இரு நிறங்களுடன் மஞ்சள், கிரே, நீலம், கருப்பு, சில்வர் வெள்ளை மற்றும் சிவப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.
பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டருக்கு போட்டியாக 110cc சந்தையில் உள்ள ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110, ஹோண்டா டியோ 110 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
2023 Hero Pleasure+ Xtech Price
-
PLEASURE+ LX – ₹ 67,798
-
PLEASURE+ VX – ₹ 71,538
-
PLEASURE+ XTEC ZX – ₹ 77,598
-
PLEASURE+ XTEC ZX JUBILANT YELLOW -₹ 79,198
-
PLEASURE+ XTEC CONNECTED – ₹ 82,198
(Tamil Nadu Ex-showroom)