Automobile Tamilan

2024 பஜாஜ் பல்சர் 220F விற்பனைக்கு அறிமுகமானது

pulsar 220f black

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட 2024 பல்சர் 220F பைக்கில் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டும் பெற்றுள்ள மாடலின் விலை ரூ.1.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே டீலர்களை வந்தடைந்த பல்சர் 220எஃப் பைக்கின் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.  220cc சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 20.5 ps பவர் மற்றும் 18.55Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பைக்கிலும் பஜாஜ் தனது டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுத்து கனெக்ட்டிவிட்டி சார்ந்து அம்சங்கள்,யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்  பெறுகின்றது. டன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி, சிக்னல், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

பல்சர் 220F மாடலின் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்ற மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

Exit mobile version