பஜாஜின் 2024 பல்சர் 150 பைக்கில் சேர்க்கப்பட்ட வசதிகள் என்ன..!

2024 பல்சர் 150 பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் இடம்பெற்றுள்ள 2024 பல்சர் 150 மோட்டார்சைக்கிளில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் சேர்க்கப்பட்டுள்ளது.

அடிப்படையான பல்சரின் கிளாசிக் தோற்றத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள மாடல்களில் ஒன்றான பல்சர் 150 மாடலில் தொடர்ந்து 149.5cc, ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 13.8bhp பவரினை 8,500rpmலும் மற்றும் 13.25Nm டார்க்கினை 6,500rpmல் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெறுகின்ற பல்சர் 150 பைக்கில் புதிய கிராபிக்ஸ் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க்கில் 150 என்ற எண் பெரிய எழுத்துருவில் வழங்கப்பட்டிருப்பதுடன் அதன் எக்ஸ்டென்ஷன் மற்றும் டெயில் பகுதிகளிலும் காணப்படுகிறது. பக்கவாட்டு பேனலில் நேர்த்தியாகத் தோற்றமளிக்கும் கார்பன் ஃபைபர் ஸ்டிக்கரையும் பெறுகிறது.

புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் வசதி மூலம் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்பது அல்லது நிராகரிக்கும் வசதி, எஸ்எம்எஸ் அலர்ட்,  பேட்டரி மற்றும் மொபைல் சிக்னல் விபரத்தை கிளஸ்ட்டரில் கொண்டுள்ளது. இதுதவிர கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பெட்ரோல் இருப்பு, சராசரி மைலேஜ், மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

2024 Bajaj Pulsar 150 Single Disc –  ₹  1 13 696/-

(எக்ஸ்ஷோரூம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *