கூடுதல் நிறத்தை பெற்ற 2024 கேடிஎம் 250 டியூக் சிறப்புகள்

2024 கேடிஎம் 250 டியூக்

கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் பைக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய அட்லான்டிக் ப்ளூ நிறம் ஏற்கனவே 390 டியூக் மாடலில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது. மற்ற நிறங்களான செராமிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரிக் ஆரஞ்ச் ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.

250 டியூக் மாடலில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து  249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

இந்த மாடலில் 5 அங்குல LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு கனெக்ட்டிவ் சார்ந்த வசதிகளை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன்,  ரைட் பை வயர் திராட்டிள், க்விக் ஷிவிஃப்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் கிடைக்கின்றது. முன்புறத்தில் USD முன் போர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

2024 கேடிஎம் 250 டியூக் பைக் விலை ரூ.2.39 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக உள்ளது. இதுதவிர கேடிஎம் 200 டியூக் பைக் இரண்டு நிறங்களை பெற்றுள்ளது.

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் தலைவர் (புரோ பைக்கிங்) சுமீத் நரங் கூறுகையில், “கேடிஎம் டியூக், அதன் பிரிவில், ரைடர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வடிவமைக்கப்பட்ட பொறியியல் உச்சத்தை பிரதிபலிக்கிறது. Ready To Race நெறிமுறையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. புதிய நிறங்களை பெற்று இளம் தலைமுறையினர் புதிய ரைடர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு பல தேர்வுகளை வழங்குகிறது.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *