பிரசித்தியான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக் மாடலான கேடிஎம் 250 டியூக் பைக் இன் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் வெளியான கேடிஎம் 390 டியூக் பைக்கின் ஸ்டைலிங் அம்சத்தை தழுவியதாக 250 டியூக் வந்துள்ளது.
ரூ2.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) 250 டியூக் மாடலில் பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள் முன் ஃபோர்க்குகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, முன்புறத்தில் ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப் பெற்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது.
கேடிஎம் 250 டியூக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
தமிழ்நாட்டில் கேடிஎம் 250 டியூக் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 2,73,110
(All price on-road in Tamil Nadu)