Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சுசூகி ஸ்கூட்டர்களின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பட்டியல்

by MR.Durai
14 June 2024, 5:57 pm
in Bike News
0
ShareTweetSend

suzuki scooters

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி நிறுவனத்தின் 2024 ஆண்டிற்கான ஆக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் 125 என மூன்று ஸ்கூட்டர்களின் என்ஜின், மைலேஜ், நிறங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

சுசூகியின் 125சிசி ஸ்கூட்டர்களில் பொதுவாக 124cc ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6750 rpm-ல் 8.7 PS மற்றும் 5,500 rpm-ல்  10 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டு சக்கரங்களுக்கு பவரை வழங்குகின்றது.

2024 Suzuki Access 125

125cc சந்தையில் ஆக்செஸ் 125 மாடல் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று இந்நிறுவனத்தின் விற்பனையில் சராசரியாக 65-70 % பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் மற்ற போட்டியாளர்களான ஜூபிடர் 125, ஆக்டிவா 125, ஃபேசினோ மற்றும் டெஸ்டினி 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.

ஸ்டாண்டர்டு, ஸ்பெஷல் எடிசன் மற்றும் ரைட் கனெக்ட் எடிசன் என மூன்று விதமாக கிடைக்கின்ற ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்று எல்இடி  ஹெட்லேம், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்டிவ் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மொபைல் சார்ந்த பேட்டரி இருப்பு, எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகள் ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்களை ரைட் கனெக்ட் வேரியண்டுகளில் மட்டும் வழங்குகின்றது.

suzuki access

மிக அகலமான இருக்கை, ரெட்ரோ ஸ்டைல், லிட்டருக்கு 48 கிமீ மிக சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்துகின்ற என்ஜினை கொண்டுள்ள மாடலின் எக்ஸ்ஷோரூம் (தமிழ்நாடு) விலை 84,135 முதல் ரூ. 94,736 வரை கிடைக்கின்றது.

Access 125CC எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Access Drum ₹ 84,135 ₹ 1,02,563
Access Disc ₹ 89,235 ₹ 1,08,431
Access Special Edition ₹ 91,037 ₹ 1,10,932
Access Ride Connect ₹ 94,736 ₹ 1,14,332

2024 Suzuki Avenis 125

ஸ்போர்ட்டிவ் ஸ்டைலில் உள்ள டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே இசட்ஆர், ஹோணடா டியோ 125 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் விற்பனை செய்யப்படுகின்ற 2024 சுசூகி அவெனிஸ் மாடலில் ரேஸ் எடிசன் மாடல் சிறப்பான பாடி கிராபிக்ஸ் கொண்டதாகவும் மற்றபடி ஸ்டாண்டர்டு மாடலும் கிடைக்கின்ற நிலையில் ரைட் கனெக்ட் உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கின்றது.

ரூ.96,236 விலையில் துவங்குகின்ற அவெனிஸ் ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் வேரியண்ட் மட்டுமே உள்ளது.

Avenis எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Avenis 125 ₹ 96,236 ₹ 1,15,543
Avenis 125 Race ₹ 97,035 ₹ 1,16,876

suzuki avenis

2024 Suzuki Burgman Street

மேக்ஸி ஸ்டைல் பெற்றுள்ள பர்க்மேன் ஸ்டீரிட்டில் ஸ்டாண்டர்டு மற்றும் ரைட் கனெக்ட் வேரியண்ட் உள்ள நிலையில் கூடுதலாக பர்க்மேன் ஸ்டீரிட் EX மாடலும் விற்பனை செய்யப்படுகின்றது. எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர், டூயல் டோன் நிறங்கள் என மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாக விளங்குகின்ற மாடலின் ஆரம்ப விலை ரூ.98,535 முதல் துவங்குகின்றது.

2024 Suzuki Burgman street price and colours

Burgman Street EX

சாதாரண மாடலில் இருந்து ரூ.20,000 விலை கூடுதலாக அமைந்துள்ள பர்க்மேன் ஸ்டீரிட் EX வேரியண்டில் இரு பக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல், சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, தானாகவே போக்குவரத்து நெரிசல் உள்ள சமயங்களில் என்ஜின் ஆஃப் ஆகும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.

Burgman Street எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Burgman Street STD ₹ 98,535 ₹ 1,18,581
Burgman Street Ride connect ₹ 1,02,536 ₹ 1,24,011
Burgman Street EX ₹ 1,18,937 ₹ 1,42,452

கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை கூடுதல் ஆக்செரிஸ் மற்றும்  நீட்டிக்கப்பட்ட வாரண்டி உள்ளிட்ட விபரங்களை சேர்க்கப்படும் பொழுது மாறக்கூடும்.

Related Motor News

2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

சுசூகி அக்சஸ் 125 ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?

2025 ஆக்சஸ் ஸ்கூட்டரில் ரைட் கனெக்ட் TFT எடிசன் வெளியானது

சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

Tags: 125cc ScootersSuzuki Access 125Suzuki AvenisSuzuki Burgman streetSuzuki Burgman street EX
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

பஜாஜ் பல்சர் ns400z பைக்

2025 பஜாஜ் பல்சர் NS400Z பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

இந்தியாவில் 2025 டிரையம்ப் Trident 660 விற்பனைக்கு வெளியானது

ரூ.44,990 விலையில் விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா..!

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

புதிய வசதிகளுடன் 2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 டீசர் வெளியானது

புதிய ஐக்யூப் 3.1 வேரியண்டை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்

கூடுதலாக ஏதெர் ரிஸ்டா இ-ஸ்கூட்டரில் S 3.7Kwh வேரியண்ட் வெளியானது

யமஹா ரேஇசட்ஆர் 125 ஹைபிரிட் ஸ்கூட்டருக்கு ரூ.10,010 வரை தள்ளுபடி சலுகை.!

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

அடுத்த செய்திகள்

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

helmet certifications uses

ISI, DOT, ECE, SHARP, SNELL, FIM சான்றிதழ்., எந்த ஹெல்மெட் வாங்கலாம்.?

hyundai creta electric

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan