Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரில் OBD-2B மேம்பாடு வெளியானது

By MR.Durai
Last updated: 25,March 2025
Share
SHARE

சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட்

சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் பர்க்மேன் ஸ்டீரிட் மற்றும் பர்க்மேன் ஸ்டீரிட் EX என இரு மாடல்களிலும் OBD-2B மேம்பாட்டை பெற்று மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 Suzuki Burgman Street Series Price list

  • Burgman Street Standard Edition – ₹ 1,00,035
  • Burgman Street Ride Connect – ₹ 1,04,037
  • Burgman Street EX – ₹ 1,20,436

தொடர்ந்து இந்த இரு ஸ்கூட்டர்களின் அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த வசதிகளில் எந்த பெரிய மாற்றமும் இல்லாமல், 124cc எஞ்சின்  6,500 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10 Nm டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

பர்க்மேன் ஸ்டீரிட் மாடலில் பின்பக்கத்தில் 90/100-10 டயரும் பர்க்மேன் ஸ்டீரிட் EX ஸ்கூட்டரில் 100/80 -12 டயரை கொண்டுள்ளதால், இருபக்கத்திலும் 12 அங்குல அலாய் வீல் பெற்றுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளதால் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் கூடிய ஒற்றை சஸ்பென்ஷனை பெற்றதாக அமைந்துள்ளது.

பர்க்மேன் ஸ்டீரிட் மாடலில் ஸ்டாண்டர்டு, ரைட் கனெ்ட் என இருவிதமான வேரியண்டடை பெற்று ரைட் கனெக்ட் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கன்சோலில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

பர்க்மேன் ஸ்டீரிட்டில் மெட்டாலிக் மேட் பிளாக் நெ. 2 (YKC), பேர்ல் மிராஜ் ஒயிட், மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர், பேர்ல் மேட் ஷேடோ கிரீன், பேர்ல் மூன் ஸ்டோன் கிரே, மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் மெட்டாலிக் மேட் பிளாக் நெ.2 (4TX) என மொத்தமாக 7 விதமான நிறங்கள் கொண்டுள்ளது.

பர்க்மேன் ஸ்டீரிட் EX-ல் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ, மெட்டாலிக் மேட் பிளாக் நெ. 2, மற்றும் மெட்டாலிக் ராயல் காப்பர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் அனைத்து இருசக்கர வாகனங்களும் ஏப்ரல் 1 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2B மேம்பாட்டுக்கு இணையாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2025 ather community day launches 1
ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,
ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்
ஏதெர் 450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது
ஏதெர் ரிஸ்டா ஸ்கூட்டரில் தொடுதிரை மற்றும் புதிய நிறங்கள்
மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது
TAGGED:Suzuki Burgman street 125Suzuki Burgman street EX
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
tvs raider 125 Wolverine
TVS
டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
TVS-X scooter-price
TVS
டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, சிறப்பம்சங்கள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms