இந்தியாவின் 5 சிறந்த பிஎஸ்-6 ஸ்கூட்டர்கள்

93f8d suzuki access 125 bs6

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் கனிசமாக ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் பிஎஸ்-6 மாசு உமிழ்வில் மிக சிறந்த 5 ஸ்கூட்டர் மாடல்களை பற்றி இங்கே தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

சுஸூகி ஆக்செஸ்

சுஸூகி மோட்டார்சைக்கிள் விற்பனையில் மிகப்பெரிய பங்களிப்பினை வகிக்கின்ற மாடலாக விளங்கும் ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் அதிகபட்சமாக 60 கிமீ மைலேஜ் வழங்கும் திறனை கொண்டிருக்கின்றது. இந்த மாடலில் பிஎஸ் 6  Fi வசதி என்ஜின் பெற்றதாக வந்துள்ள இந்த ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6750 ஆர்.பி.எம்-ல் 8.7 பிஎஸ் பவர் மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம்-மில் 10 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

ஆக்செஸ் 125 (டிரம் பிரேக்) – ரூ.70,585

ஆக்செஸ் 125 அலாய் வீல் (டிரம் பிரேக்) – ரூ.72,585

ஆக்செஸ் 125 (டிஸ்க் பிரேக்) – ரூ.73,487

ஆக்செஸ் 125 அலாய் (டிரம் பிரேக்) – ரூ.74,285 (ஸ்பெஷல் எடிஷன்)

ஆக்செஸ் 125 அலாய் (டிரம் பிரேக்) – ரூ.75,185 (ஸ்பெஷல் எடிஷன்)

ca514 suzuki access 125 bs6 features

டிவிஎஸ் ஜூபிடர்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடலாக உள்ள 110 சிசி ஜூபிடர் ஸ்கூட்டரில் FI பெற்று 7,000 ஆர்.பி.எம்-ல் 7.37 ஹெச்பி பவர் மற்றும்  5500 ஆர்.பி.எம்-மில் 8.4 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

டிவிஎஸ் ஜூபிடரின் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 60 கிமீ முதல் 62 கிமீ வரை வழங்குகின்றது.

ஜூபிடர் விலை ரூ. 65,330

ஜூபிடர் ZX விலை ரூ. 67,330

டிவிஎஸ் ஜூபிடர் கிளாசிக் விலை ரூ. 73,111

da773 tvs jupiter bs6

ஹோண்டா ஆக்டிவா 6ஜி

லிட்டருக்கு சராசரியாக 60 கிமீ மைலேஜ் வழங்கவல்ல ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் Fi பெற்ற  ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.67,888

முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.69,188

activa 6g

யமஹா ஃபேசினோ

முன்பாக 110சிசி என்ஜினை பெற்று வந்த இந்த மாடல் இப்போது 125சிசி என்ஜினை பெற்றதாக புதிய ஃபேசினோ வந்துள்ளது. மேலும் முந்தைய மாடலை விட சிறப்பான முறையில் ஸ்டைலிங் மாற்றங்களை கொண்டுள்ளது.

125 fi என்ஜின் அதிகபட்சமாக 8.2 ps பவர் மற்றும் 9 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  முந்தைய என்ஜினுடன் ஒப்பீடுகையில் 30 சதவீத கூடுதல் பவர் மற்றும் 16 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்குகின்றது. எனவே, யமஹா ஃபேசினோ 125 Fi லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேசினோ 125 டிரம் பிரேக் – ரூ.69,250

ஃபேசினோ 125 டிரம் பிரேக் – ரூ.70,250 (Dark matte blue, Suave copper)

ஃபேசினோ 125 டிஸ்க் பிரேக் – ரூ.71,750

ஃபேசினோ 125 டிஸ்க் பிரேக் – ரூ.72,750 (Dark matte blue, Suave copper)

88aa1 yamaha fascino 125

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலில் 125 சிசி என்ஜினை பெற்று FI நுட்பத்துடன் கூடிய ஹீரோவின் 10 சென்சார் நுட்பத்தை (XSens Technology) கொண்டதாக 125 சிசி என்ஜின் 9 பிஹெச்பி பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 என்எம் டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது. இந்த மாடல் சராசரியாக லிட்டருக்கு 58 கிமீ மைலேஜ் வழங்குகின்றது.

பிஎஸ் 6 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விலை பட்டியல்

BS6 மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (டிரம் பிரேக்): ரூ. 71,100

BS6 மேஸ்ட்ரோ எட்ஜ் 125 (டிஸ்க் பிரேக்): ரூ. 73,300

BS6 மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ( Disc brake and Prismatic Color Technology): ரூ. 73,800

bs6 mastero edge

( விலை அனைத்தும் எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *