Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.3,499 மாதந்திர இஎம்ஐ-யில் ரிவோல்ட் ஆர்வி 400 விற்பனைக்கு அறிமுகமானது

by automobiletamilan
August 28, 2019
in பைக் செய்திகள்

rv400

இந்தியாவின் முதல் AI ஆதரவை பெற்ற எலக்ட்ரிக் பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி 400 பைக் விற்பனைக்கு ரூபாய் 3,499 மாதந்திர இஎம்ஐ முறையில் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 156 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை ஆர்வி 400 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் குர்கான் ஆலையில் ஆண்டுக்கு 120,000 பைக்குகளை தயாரிக்க இயலும்.

ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி400 மின்சார பைக் மாடலுக்கு என பிரத்தியேகமான கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு, டேங்க் போன்ற வடிவமைப்பின் கீழ் பேட்டரி மற்றும் மோட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் சேர்கப்பட்டுள்ளது. சிறப்பான பிரேக்கிங் சிஸ்டம் பெற்று முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ள இந்த மாடல் சிறப்பான ஸ்போர்ட்டிவ் நேக்டு ஸ்டீரிட் பைக் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.

ரிவோல்ட் ஆப் மற்றும் டெக் வசதிகள்

வழக்கம்போல மோட்டார்சைக்கிள்களுக்கு வழங்கப்படும் ஸ்டார்டிங் கீ இல்லாமல், உங்கள் ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் வாயிலாக ஆர்வி 400 பைக் மாடலுடன் இணைக்கும்போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டு, ஸ்டார்ட் பொத்தானை அழுத்தினால் வாகனம் இயங்க துவங்கும். இந்த பைக்கிற்கு என பிரத்தியேகமாக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி எல்டிஇ ஆதரவு  இ-சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ரிவோல்ட் ஸ்மார்ட் கீ ப்ளூடுத் வாயிலாக இணைக்க பேரிங் செய்யப்பட்டிருக்கும்.

கூகுள் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் ஆதரவுடன் இந்த பைக்கினை ஸ்டார்ட் செய்ய இயலும். உலகில் முதன் முறையாக வாய்ஸ் கமெண்ட் மூலமாக ஸ்டார்ட் செய்யும் ஆதரவை பெற்ற பைக்காக வந்துள்ளது. இதற்காக பிரத்தியேகமாக மைக் மற்றும் ஸ்பீக்கர் இணைக்கப்பட்ட ப்ளூடுத் ஆதரவை பெற்ற ஹெல்மெட் தனியாக விற்பனை செய்யப்பட உள்ளது. பைக்கினை ஸ்டார்ட் செய்ய Stat Revolt என கூறினால் ஸ்டார்ட் ஆகி விடும்.

ஆர்வி 400

இதன் வாயிலாக வாகனத்தினை பற்றி பல்வேறு தகவல்களை பெற , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் சாட்டிலைட் நேவிகேஷன், பேட்டரி இருப்பு, குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் இயக்க அனுமதிப்பது, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் நிகழ் நேரத்தில் பைக் தகவல் மற்றும் கோளாறுகளை கண்டறியும் வசதி, வாய்ஸ் கமென்ட் சிஸ்டம், சைலன்சர் செயற்கை முறையில் செயல்படும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை முறையில் சைலென்சர் ஒலி

பொதுவாக பெட்ரோல் என்ஜின் பைக்குகளை போன்று எலெக்டரிக் பைக்குகள் சைலென்சர் ஒலியை வழங்காது. இதனை கவனத்தில் கொண்டு பெட்ரோல் மாடல்களுக்கு இணையாக வெளியேற்ற ஒலியை தனது ஆப் மூலம் நான்கு விதமான நிலைகளில் ரிவோல்ட் ஆப்பின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் பயனாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயற்கை முறையில் ஒலி ஏற்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக இந்த பைக்கின் பேனல்களில் நான்கு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முழு கட்டுப்பாடும் ஆப் வாயிலாக பெற இயலும்.

IP67 ஆதரவை பெற்ற பேட்டரி ஆனது 215 மிமீ நீருள்ள இடங்களிலும் பயணித்தாலும் இந்த பைக்கிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பேட்டரி ஆனது இருக்கும்போது சார்ஜ் செய்யவோ அல்லது (போர்டெபிள்) பேட்டரியை தனியாக எடுத்தும் சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டு, 15A ஆன் போர்டு சார்ஜர் வாயிலாக பேட்டரியை 4 மணி நேரத்துக்குள் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும் நீங்கள் பயணித்தில் இருக்கும்போது திடீரென பேட்டரி சார்ஜ் குறைவாக இருந்தால், உடனடியாக ரிவோல்ட் ஆப் வாயிலாக அருகில் உள்ள ஸ்வாப் பேட்டரி மையத்தை அனுகினால் உடனடியாக முழுமையான சார்ஜிங் உள்ள மாற்று பேட்டரி வழங்கப்படும். உங்கள் இருப்பிடம் அல்லது நீங்கள் கோரும் இடத்தில் வழங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது. மேலும் பேட்டரிக்கு வரம்பற்ற கிலோமீட்டர் வாரண்டியை இந்நுறுவனம் வழங்குகின்றது.

ரைடிங் மோடு மற்றும் டாப் ஸ்பீடு

45 கிமீ வேகத்தில் பயணிக்க ஈக்கோ மோடு, 65 கிமீ வேகத்தில் பயணிக்க சிட்டி மோட், மற்றும்  85 கிமீ வேகத்தில் பயணிக்க ஸ்போர்ட் என மூன்று வகையான மோடுகளை பெற்றிருக்கின்றது. மேலும் எதிர்காலத்தில் நைட்ரோ மோட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆர்வி400 பைக்கில் உள்ள ஈக்கோ மோடில் பேட்டரி ஆனது முழுமையான சிங்கிள் சார்ஜின் மூலம் அதிகபட்சமாக 156 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வழி வகுக்கும் என இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரைடர்களை இயக்கும் விதம் மற்றும் சாலையின் தன்மைக்கு ஏற்ப ரேஞ்ச் நிகழ் பயன்பாட்டில் மாறுபடும் என கருதப்படுகின்றது. மேலும், அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆக இருக்கும்.

ரிவோல்ட் பைக்கிற்கான சர்வீஸ் ரிவோல்ட் ஹப் மூலம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு 10,000 கிமீ க்கு ஒரு முறை மட்டுமே ஆகும். மேலும் முதல் மூன்று வருடங்களில் முதன்முறை மட்டும் இலவசமாக டயர் மாற்றித் தரப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300

அடுத்ததாக குறைந்த ரேஞ்ச் பெற்ற ஆர்வி 300 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.5kW ஹப் மோட்டார் மற்றும் 2.7kWh பேட்டரி பொருத்தப்பட்டு இதன் வேகன் மணிக்கு 65 கிமீ ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ரேஞ்ச் 85 கிமீ -150 கிமீ ஆகும்.

ரிவோல்ட் ஆர்வி 300 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.2,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,499 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் மாதந்திர இஎம்ஐ கட்டணம் ரூ.3,999 ஆக 37 மாதங்களுக்கு வசூலிக்கப்பட உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963

ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963

rv 400 price

Tags: Revolt RV400ரிவோல்ட் RV400
Previous Post

ரூ.4.95 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகமானது

Next Post

புதிய ரெனோ ட்ரைபர் காரின் விலை, வேரியண்ட் விபரம்

Next Post

புதிய ரெனோ ட்ரைபர் காரின் விலை, வேரியண்ட் விபரம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version