பிரிமியம் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பியாஜியோ நிறுவனத்தின் ஏப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்களில் பாதுகாப்பு சார்ந்த ஏபிஎஸ் பிரேக் மற்றும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா
இரு பிராண்டுகளிலும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற மாடல்கள் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், சிபிஎஸ் பிரேக் பெற்ற மாடல்கள் அதிகபட்சமாக ரூ.3000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள டீலர்களுக்கு வந்து சேர்ந்துள்ள புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களின் வரிசையில் ஏப்ரிலியா SR 150 ரேஸ், ஏப்ரிலியா SR 150 கார்பன் ஆகிய இரு மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் , ஏப்ரிலியா SR 125 சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தயாரிப்பாளரான வெஸ்பா பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்ற வெஸ்பா VXL 150 ABS, வெஸ்பா SXL 150 ABS, வெஸ்பா SXL 150 ரெட் மற்றும் வெஸ்பா எலிகன்ட் 150 ABS ஆகிய மாடல்களில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக், இதை தவிர வெஸ்பா VXL 125 , வெஸ்பா SXL 125 , வெஸ்பா SXL 125 ரெட் ஆகிய மாடல்களில் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 1, 2019 முதல் இரு சக்கர வாகனங்களில் பாதுகாப்பு சார்ந்த அம்சமான 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் மற்றும் 125சிசி அல்லது அதற்கு குறைந்த திறன் பெற்ற டூ வீலர்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரும்பாலான இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் அடுத்த சில வாரங்களில் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக்கை இணைத்து விற்பனைக்கு வெளியிட உள்ளனர்.
புதிய வெஸ்பா ஸ்கூட்டர் விலை பட்டியல்
வெஸ்பா VXL 150 ABS – ரூ. 98,310
வெஸ்பா SXL 150 ABS – ரூ. 1.02 லட்சம்
வெஸ்பா SXL 150 ரெட் – ரூ.1.03 லட்சம்
வெஸ்பா எலிகன்ட் 150 ABS – ரூ.1.08 லட்சம்
வெஸ்பா VXL 125 – ரூ. 88,250
வெஸ்பா SXL 125 – ரூ. 91,450
வெஸ்பா SXL 125 ரெட் – ரூ. 92,500
புதிய ஏப்ரிலியா ஸ்கூட்டர் விலை பட்டியல்
ஏப்ரிலியா SR 150 ரேஸ் – ரூ. 89,550
ஏப்ரிலியா SR 150 கார்பன் – ரூ. 82,550
ஏப்ரிலியா SR 125 சிபிஎஸ் – ரூ. 69,250