இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் 2018 பஜாஜ் டிஸ்கவர் 125 ஆகிய இரண்டு பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம், 2018 பஜாஜ் அவென்ஜர் க்ரூஸ் 220 மற்றும் ஸ்டீரிட் 220, 2018 பஜாஜ் டோமினார் மற்றும் 2018 பஜாஜ் பிளாட்டினா கம்ஃபார்டெக் ஆகிய மாடல்களை காட்சிக்கு அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் டிஸ்கவர் 110
இந்நிறுவனத்தின் தொடக்கநிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற சிடி100 பி, பிளாட்டினா 100, டிஸ்கவர் 125, பஜாஜ் வி12 ஆகிய மாடல்களை தொடர்ந்து மீண்டும் டிஸ்கவர் வரிசையில் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் ரூ. 50,176 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
டிஸ்கவர் 110 பைக்கில் அதிகபட்சமாக 8.4 ஹெச்பி பவர், 9.8 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 115cc DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
புதிய டிஸ்கவர் 110 பைக்கில் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் மிக நேர்த்தியான பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன், நேர்த்தியான பாடி கிராபிக்ஸ், இரு வண்ண கலவையிலான,டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் ஆகியவற்றை பெற்றிருக்கின்ற இந்த மாடலில் மிக சிறப்பான சொகுசு தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான சஸ்பென்ஷனுடன், டிரம் பிரேக் அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.
பஜாஜ் டிஸ்கவர் 125
டிரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரு வேரியன்ட்களில் கிடைக்கின்ற டிஸ்கவர் 125 பைக்கில் மிக சிறப்பான சஸ்பென்ஷனை பெற்றிருப்பதுடன் 10.8hp பவர், 11Nm டார்க்கினை வழங்கும் 124cc DTS-i எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய டிஸ்கவர் 125 பைக்கில் கருப்பு, சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களுடன் இரு வண்ண கலவையிலான அம்சத்தை பெற்ற இருக்கையுடன்,டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர், பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் விற்பனைக்கு கிடைக்கின்றது.
பஜாஜ் டிஸ்கவர் 125 பைக் விலை விபரம்
டிஸ்கவர் 125 டிரம் – ரூ.53,171
டிஸ்கவர் 125 டிஸ்க் – ரூ. 55,994