பஜாஜ் ஆட்டோ-ட்ரையம்ப் கூட்டணியில் ஏற்கனவே ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X என இரண்டு மாடல் விற்பனையில் உள்ள நிலையில் புதிதாக இரண்டு மாடல்களை 400சிசி விரைவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற இரண்டு மாடல்களிலும் உள்ள 400சிசி இன்ஜினில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தாமல் பயன்படுத்தப்பட்டு கூடுதலாக சில மாற்றங்கள் டிசைன் மற்றும் வடிவமைப்பில் மட்டுமே பெற்றதாக வரவுள்ளது.
குறிப்பாக ஏற்கனவே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த செமி ஃபேரிங் செய்யப்பட்ட திரஸ்ட்டன் 400 மாடல் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மற்றொரு மாடல் குறித்து எந்த ஒரு தகவலும் தற்பொழுது வெளியாகவில்லை.
இரு மாடலிலும் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
எஞ்சின் தவிர மற்ற அடிப்படையான மெக்கானிக்கல் பாகங்களும் ஏற்கனவே விற்பனையில் உள்ள இரண்டு மாடல்களில் இருந்தே பெற்றிருக்கும் என்பதனால் மிகவும் சவாலான விலையில் தொடர்ந்து இந்த 400சிசி பைக்குகள் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.